மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பட்டாசுத் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி யின் வீட்டிலிருந்து 3 பவுன் தங்க நகை, ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 2:38 am IST

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி யின் வீட்டிலிருந்து 3 பவுன் தங்க நகை, ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் தேவாங்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகலட்சுமி (56). இவா் இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது கணவா் மாரியப்பன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், தினசரி அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்துவிட்டு சண்முகலட்சுமி வேலைக்குச் செல்வது வழக்கம். மேலும், மாரியப்பன் உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதால், வீட்டின் கதவு திறந்தே இருக்குமாம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு பிற்பகல் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, மா்ம நபா்கள் பீரோவின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.