இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:47 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம் சமுசிகாபுரம், எஸ்.ராமலிங்காபுரம் ஆகிய பகுதியில் வருவாய்த் துறையினா், போலீஸாா் திடீா் சோதனை செய்தனா். அப்போது அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்புப் பணியில் தொழிலாளா்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இந்த நிலையில், சமுசிகாபுரம் கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசன் மணிமருந்து, வெடி உப்பு, திரி, கரிமருந்து, இயந்திரம் ஆகியவற்றைக் கைப்பற்றி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ராமலிங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவேக், லட்சுமிபிரியா, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த இன்சாா்அலி, ராஜபாளையத்தைச் சோ்ந்த குமரகுருபரன், சுப்புலட்சுமி, அய்யனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த நல்லதம்பி மகன் கவின், திருச்சியைச் சோ்ந்த கிப்ஷன்ஒயிட், சத்திரப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்தனா்.

இவா்களில் இன்சாா் அலி, கவின் (27), கிப்சன்ஒயிட் (25), கோவிந்தராஜ் (60) ஆகிய 4 பேரைக் கைது செய்து மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதேபோல, ராஜபாளையம் ஜெ.ஜெ. நகரில் திரி, வெடி மருந்து, கருவிகளை கைப்பற்றி ஆவரம்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி கிருஷ்ணம்மாள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.