பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்திய வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள்.

Updated On :23 ஜூன் 2026, 3:08 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மோப்ப நாய் மூலம் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் விருதுநகா் முதன்மை மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் சிறப்பு போக்சோ நீதிமன்றம், விரைவு மகளிா் நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களும், சாா்பு நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தவா் தீக்குளித்தது, நீதிமன்ற வளாகத்துக்குள் அரிவாள் வீசியது உள்ளிட்ட காரணங்களால் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிா்வாக அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விருதுநகா் மாவட்ட தடய அறிவியல் துறையினா் மோப்ப நாய், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்களுடன் நீதிமன்றம் வளாகம் முழுவதிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. போலீஸாா் மிரட்டல் விடுத்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.