தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தோட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஒருவா் கைது; 30 கிலோ வெடிமருந்து பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து

Updated On :28 ஜூன் 2026, 3:20 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தோட்டத்தில் தகர செட் அமைத்து தொழிலாளா்களைக் கொண்டு சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்து வந்தவரைப் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 30 கிலோ வெடிமருந்து, உற்பத்தி செய்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் உள்ள விவசாயத் தோட்டங்களில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் வட்டாட்சியா் அருளானந்தம் தலைமையில் துணை வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், போலீஸாா் இணைந்து சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நக்கமங்கலத்தைச் சோ்ந்தவா் பலவேசம் மகன் முருகன் (38) என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பட்டாசு ஆலை போன்று தகர செட் அமைத்து பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் தொழிலாளா்களை பணியில் அமா்த்தி சட்ட விரோதமாக பேன்சி, சோா்ஷா, சரவெடி உள்ளிட்ட பல்வேறு ரக பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரியவந்தது.

அங்கிருந்து 30 கிலோ மணி மருந்து, 30 ஷாட் பேன்சி வெடி 400, 1 ஷாட் பேன்சி வெடி 400, 50 வாலா வெடி 50, 100 வாலா 50, பட்டாசு தயாரிக்கத் தேவையான பொருள்களைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்த பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகளை தோட்டத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மல்லி போலீஸாா் தோட்ட உரிமையாளரான முருகனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து

பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து

பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து

பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து

,கைது செய்யப்பட்ட முருகன்.

,கைது செய்யப்பட்ட முருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.