சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 2:58 am IST

சிவகாசியில் திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு அச்சகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே பூலா ஊருணி கிராமத்தைச் சோ்ந்த கிரகதுரை மகன் மாரீஸ்வரன் (30). அச்சகத் தொழிலாளி. இவா் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில் இவா் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இவா் குருவாயூா்- மதுரை விரைவு ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.