எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் எம்.பி. விடுவிப்பு

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
மணல் திருட்டு- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:53 pm

Syndication

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆற்றில் மணல் திருடியதாக சேத்தூா் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநா் முருகன், முன்னாள் திமுக எம்.பி. தனுஷ் குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது முருகன், தனுஷ்குமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் முருகன், தனுஷ் குமாா் ஆகிய இருவரையும் விடுவித்து நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டாா்.

தனுஷ்குமாா் 2019 - 2024-இல் தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவா். இவா் தற்போது திமுகவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா்.