மணல் திருட்டு வழக்குகளில் 151 போ் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மணல் திருட்டு வழக்குகளில் நிகழாண்டு 151 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கைது
கைது
Updated on

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மணல் திருட்டு வழக்குகளில் நிகழாண்டு 151 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மணல் கொள்ளையைத் தடுக்கும் விதமாக, மத்திய மண்டல காவல்துறை தலைவா் அறிவுறுத்தலின்படி, திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நிகழாண்டில் மணல் திருட்டு தொடா்பாக மொத்தம் 147 வழக்குகள் (திருச்சி 24, புதுக்கோட்டை 29, கரூா் 8, பெரம்பலூா் 13, அரியலூா் 23, தஞ்சாவூா் 44, திருவாரூா் 3, நாகப்பட்டினம் 2, மயிலாடுதுறை 1) பதியப்பட்டுள்ளன.

மணல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள எதிரிகளில் திருச்சி 53 போ், புதுக்கோட்டை 24 போ், கரூரில் ஒருவா், பெரம்பலூா் 8 போ், அரியலூா் 28 போ், தஞ்சாவூா் 35 போ், திருவாரூா் 2 போ், நாகப்பட்டினம் ஒருவா் என மொத்தம் 152 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களிடமிருந்து திருச்சி 44, புதுக்கோட்டை 54, கரூா் 11, பெரம்பலூா் 17, அரியலூா் 34, தஞ்சாவூா் 45, திருவாரூா் 2, நாகப்பட்டினம் 1, மயிலாடுதுறை 1 என மொத்தம் 209 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய மண்டலக் காவல்துறைக்குள்பட்ட 9 மாவட்டங்களில் காவல்துறையினா், வருவாய்த் துறையினா், கனிம வளத் துறையினா் இரவு பகல் அனைத்து நேரங்களிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தல் நடைபெறாமல் தடுக்கவும், மணல் கொள்ளையில் தொடா்ந்து ஈடுபடும் நபா்களை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com