அருப்புக்கோட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எஸ். காா்னா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் திருச்சியை சோ்ந்த அழகா்சாமி உரிய ஆவணமின்றி 500 கிராம் வெள்ளி கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக் கட்டியை பறிமுதல் செய்து, அருப்புக்கோட்டை உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்வேலிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தேனியை சோ்ந்த வீரேஸ்வரன் என்பவா் உரிய ஆவணமின்றி ரூ. 79,200 கொண்டு சென்றது தெரிய வந்தது.
மாடு வாங்குவதற்காக அந்தப் பணத்தை கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா். அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
