விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூா் அருகே பெரும்பத்தூா் கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரசாத் குமாா் (32). திருவாரூரில் ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் விடுமுறைக்காக ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
அப்போது ராஜபாளையம் அருகே சோழபுரம் பெரிய பாலத்தை கடந்து சென்றபோது வேகத் தடையில் ஏறி இறங்கியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


