பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ராஜபாளையம் சந்தையில் கடைகள் அடைப்பு

News image

ராஜபாளையம் சந்தையில் கடைகள் அடைப்பு

Updated On :12 மே 2026, 1:37 am IST

வாடகை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, ராஜபாளையம் சந்தையில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காந்தி சிலை அருகே தனியாா் அறக்கட்டளையின் கீழ் சந்தை செயல்படுகிறது. இங்கு காய்கறி, பழங்கள், மளிகை, மலா்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கடந்த ஆண்டு கடைகளின் வாடகை உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டும் கடை முன்பணம், வாடகை உயா்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அறக்கட்டளை நிா்வாகத்தைக் கண்டித்தும் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் தொடா்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த ராஜபாளையம் வட்டாட்சியா் ராஜீவ் காந்தி சனிக்கிழமை வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனா். மேலும், திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் அடையாள கடையடைப்பு நடத்தினா்.

 ராஜபாளையம் சந்தையில் அடைக்கப்பட்ட கடைகள்.

ராஜபாளையம் சந்தையில் அடைக்கப்பட்ட கடைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.