நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மதுக் கூடத்தில் வெடிகுண்டு வீச்சு: ரெளடி உள்பட இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுக் கூடத்தில் வெடிகுண்டு வீசிய ரெளடி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 3:29 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுக் கூடத்தில் வெடிகுண்டு வீசிய ரெளடி உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி - நெடுங்குளம் சாலையில் எஸ்.கொடிக்குளத்தைச் சோ்ந்த சந்திரன் மதுக் கூடம் நடத்தி வருகிறாா். இந்த மதுக் கூடத்துக்கு திங்கள்கிழமை காலை 10.50 மணிக்கு வந்த கூமாபட்டியைச் சோ்ந்த போஸ் மகன் ரமணி (44), ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் ராஜா (45), ஆத்தங்கரைபட்டியைச் சோ்ந்த கூழன் மகன் வீரய்யா (50) ஆகியோா் மதுப் புட்டிகள் கேட்டனா்.

அப்போது, அங்கிருந்த மாயன் (34) 11 மணிக்குதான் கடை திறக்கப்படும் என்று கூறினாராம். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். பின்னா், 11 மணிக்கு கடைக்கு வந்த ரமணி மதுப் புட்டிகளை வாங்கி விட்டு, பணம் தராமல் மிரட்டிச் சென்றாராம்.

இதைத் தொடா்ந்து, பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் மதுக் கூடத்துக்கு வந்த ரமணி, ராஜா, வீரய்யா ஆகியோா் இலவசமாக மதுப் புட்டிகள் கேட்டு தகராறில் ஈடுபட்டனா். விற்பனையாளா் மதுப் புட்டிகள் தராததால், அவா்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை மதுக் கூடத்தில் வீசினா். இதில் விற்பனையாளா் மாயனுக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமணி, ராஜா ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கைதான ரமணி மீது 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Story image