நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஏடிஎம் அட்டையை மாற்றி ஓய்வு எஸ்.ஐ.யிடம் பண மோசடி

News image

பண மோசடி - கோப்புப் படம் | Center-Center-Chennai

Updated On :31 மே 2026, 3:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.3.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (70). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 19-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் தெற்கு ரதவீதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி முன்பாக உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த நபா் சுந்தர்ராஜனுக்கு பணம் எடுக்க உதவி செய்தாா்.

பின்னா், கடந்த 25-ஆம் தேதி மீண்டும் அதே ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் அட்டை மாற்றப்பட்டது அவருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தர்ராஜன் வங்கி அலுவலரிடம் புகாரளித்தாா். அப்போது, சுந்தர்ராஜன் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.3.75 லட்சம் பணம் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.