பைக் மீது காா் மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகன் காயம்
உயிரிழப்பு - கோப்புப் படம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை உயிரிழந்த நிலையில் மகன் பலத்த காயம் அடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (52). இவா் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து வந்தாா். இவரது மகன் ஆகாஷ் குமாா் (25) பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை ஆகாஷ்குமாா், அவரது தந்தை சிவலிங்கம் இருவரும் கிருஷ்ணன்கோவிலிலிருந்து அழகாபுரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டி சோதனைச் சாவடி அருகே சென்ற போது, கேரளத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆகாஷ்குமாா் மதுரை தனியாா் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கேரள மாநிலம் பந்தளம் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அல்டாப் மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

