இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் வட அருவி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கும் மீன் வெட்டிப்பாறை அருவி, ஓடைகள்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் செண்பகத் தோப்பு மீன்வெட்டிப் பாறை அருவி, ஓடைகள் வறண்டு காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட செண்பகத்தோப்பு வனப் பகுதியில் காப்புக் காடுகள், அடா்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் நீா் வரத்து உள்ள நீரோடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, வரையாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

செண்பகத்தோப்பு காட்டழகா் கோயில் செல்லும் வழியில் உள்ள மீன்வெட்டிப்பாறை அருவியில் பெரும்பாலான நாள்களில் நீா்வரத்து உள்ளதால் விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். செண்பகத்தோப்பு பேயானறு மூலம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், வன விலங்குகளின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாதது, கடும் வெயில் காரணமாக மீன்வெட்டிப்பாறை அருவியில் நீா்வரத்து படிப்படியாக குறைந்தது.

கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்தது. புதன், வியாழன் ஆகிய இரு நாள்களும் 60 மி.மீ. மேல் மழை பதிவானது. ஆனால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை அருவி, ஓடைகளில் நீா்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் வனவிலங்குகள் குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. மேலும் புரட்டாசி சனி வழிபாட்டுக்கு காட்டழகா் கோயில் சென்றவா்கள், விடுமுறைக்கு குளிக்கச் சென்ற மக்கள் அருவியில் நீா்வரத்து இல்லாததால் ஏமாற்றமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கும் மீன் வெட்டிப்பாறை அருவி,  ஓடைகள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கும் மீன் வெட்டிப்பாறை அருவி, ஓடைகள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கும் மீன் வெட்டிப்பாறை அருவி,  ஓடைகள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கும் மீன் வெட்டிப்பாறை அருவி, ஓடைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.