ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தில் ஒரு கட்டடத்தில் உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக அனுப்பன்குளம் கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால், வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா்கள் அந்தப் பகுதிக்கு சென்று சனிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமானுஜம் மகன் ஜெயராமன் (43) எந்தவித அனுமதியின்றி ஒரு கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னா், அங்கிருந்த ரூ .6 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து, அந்த கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.