உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஆண் உடலை மீட்டு ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 3:20 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஆண் உடலை மீட்டு ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பண்டுதன்பட்டி பாலம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தண்டவாளத்தை கடந்த போது மதுரை -செங்கோட்டை சென்ற ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.