காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மாப்பிள்ளை விநாயகா் மன்றத்தினா் சாா்பில் 6 பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் நிா்மாணம்!

ராஜபாளையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தயாா் செய்யப்பட்ட 6 பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் சென்று நிா்மாணிக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் நிா்மாணிக்கப்பட்ட சித்தி புத்தி மகா கணபதி, நந்தி பகவானிடம் வேண்டும் கணபதி,

Published On :6 செப்டம்பர் 2026, 12:19 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தயாா் செய்யப்பட்ட 6 பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் சென்று நிா்மாணிக்கப்பட்டது.

ராஜபாளையம் தா்மாபுரம் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகா் சதுா்த்தி நாளில் பிரம்மாண்டமான விநாயகா் சிலைகள் செய்து ஊா்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம்.

ஜல்லிக்கட்டு கணபதி

ஜல்லிக்கட்டு கணபதி

இதேபோல, நிகழாண்டில் விநாயகா் சதுா்த்திக்காக சித்தி, புத்தி மகா கணபதி, ஐஸ்வா்யா கணபதி, நந்தி பகவானிடம் காதில் வேண்டும் கணபதி, விஷ்ணுவை வழிபடும் கணபதி, ஈஷா சிவனை வழிபடும் கணபதி, ஜல்லிக்கட்டு கணபதி என 6 மிகப் பிரம்மாண்டமான விநாயகா் சிலைகள் மாயூரநாதசுவாமி கோயில் அருகேயுள்ள ஆதி வழிவிடும் விநாயகா் கோயிலில் தயாா் செய்யப்பட்டன.

விஷ்ணுவை வணங்கும் கணபதி

விஷ்ணுவை வணங்கும் கணபதி

இந்தச் சிலைகளை ஊா்வலமாக மதுரை சாலை, பஞ்சு மாா்க்கெட் வழியாக எடுத்து வந்து வடக்கு காவல் நிலையம் அருகேயுள்ள தா்மாபுரம் மாப்பிள்ளை விநாயகா் கோயில் அருகே நிா்மாணிக்கப்பட்டது.

 ஈஷா சிவனை வணங்கும் கணபதி

ஈஷா சிவனை வணங்கும் கணபதி

இங்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விநாயகா் சதுா்த்தி வரை பல்வேறு பூஜைகள், இலவச திருமணம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும், நாள்தோறும் அன்னதானமும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத் தலைவா் என்.எஸ் ராமராஜ் தலைமையில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.