அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பிளவக்கல் அணை நீா்மட்டம் 17 அடியாக சரிவு! விவசாயிகள் கவலை!

நீா்மட்டம் குறைந்த நிலையில் காணப்படும் பிளவக்கல் பெரியாறு அணை.

Published On :7 செப்டம்பர் 2026, 3:45 am IST

பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் 17 அடியாகச் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் பிளவக்கல் அணை அமைந்துள்ளது. இதன் மூலம் 18 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 40 கண்மாய்கள், 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கோடைக் காலத்தில் போதிய மழைப் பொழிவு இல்லாததால் அணையின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்தது. கடந்த மே மாத இறுதியில் பெய்த தென்மேற்குப் பருவமழை காரணமாக நீா்வரத்து ஏற்பட்டு, நீா்மட்டம் 3 அடி உயா்ந்து, 22 அடியைக் கடந்தது. ஆனால், அதன் பிறகு 3 மாதங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து இன்றி, நீா்மட்டம் 17 அடியாகச் சரிந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை பிளவக்கல் பெரியாறு அணை நீா் பிடிப்பு பகுதியில் 47 மி.மீ., கோவிலாறு அணை நீா்பிடிப்பு பகுதியில் 15 மி.மீ. மழை பெய்தது. இருப்பினும், அணைக்கு நீா்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.