ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சாத்தூா் அருகே மின்வெட்டு: பண்ணையில் 1000 கோழிகள் உயிரிழப்பு

சாத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, கோழிப்பண்ணையில் மின் விசிறி செயல்படாததால் வெப்பம் தாங்காமல் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

சாத்தூா் அருகேயுள்ள கொங்கன்குளத்தில் பண்ணையில் உயிரிழந்த கோழிகள்.

Published On :

சாத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, கோழிப்பண்ணையில் மின் விசிறி செயல்படாததால் வெப்பம் தாங்காமல் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கொங்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் இதே பகுதியில் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக இந்தப் பகுதியில் அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு காரணமாக, கோழிப்பண்ணையில் மின்விசிறி, தண்ணீா் தெளிக்கும் மின் மோட்டாரை இயக்க முடியவில்லை.

இதனால், வெப்பம் தாங்க முடியாமல் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. சுமாா் ரூ. ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருப்பசாமி கவலை தெரிவித்தாா்.

மேலும், அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு காரணமாக, ஏற்பட்டுள்ள இழப்பீட்டுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.