
ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!
ஜந்தர் மந்தரில் போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்கள் கைது. - படம் - பிடிஐ
தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்கள் கைது இன்று (அக். 10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் என நாடுமுழுவதும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினரிடமிருந்து இன்னும் முறையான அனுமதி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும், போராட்டம் எதிரொலியாக பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் தில்லி கொண்டு வரப்பட்டு, தில்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. 27 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புகாகக் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து இளைஞர்கள் மற்றும் சிஜேபி ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கின்றனர்.
இந்த நிலையில், போராட்டக் களத்திற்கு வந்து போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
Summary
More than 150 CJP supporters were arrested today (Oct. 10) while attempting to stage a protest at Jantar Mantar in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







