பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று பிரதமர் அஞ்சுகிறார்: அபிஜீத் தீப்கே

மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என பிரதமர் அஞ்சுகிறார் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்தது குறித்து...

Prime Minister Narendra Modi, CJP leader Abhijit Deepke

பிரதமர் நரேந்திர மோடி, சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே - கோப்புப்படம்

Published On :

மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அஞ்சுகிறார் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே சனிக்கிழமை (அக். 10) தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று போராட்டம் நடத்த உள்ளது.

போராட்டம் எதிரொலியாக பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் தில்லி கொண்டு வரப்பட்டு, தில்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. 27 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புகாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே மும்பையிலிருந்து தில்லி புறப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் பிரதமர் ஏன் இவ்வளவு அஞ்சுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரயில் சேவைகளையும் மெட்ரோ சேவைகளையும்முடக்க என்ன அவசியம் இருக்கிறது? இணைய இணைப்பைத் துண்டித்து, சாலைகளை மறித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரிலிருந்து ராணுவத்தைக் கொண்டு வந்து தில்லியில் நிறுத்தியுள்ளனர். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க விரும்புகிறார்களா?

இதற்குப் பிறகு நாட்டு மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று பிரதமர் அஞ்சுகிறார். அதனால்தான், போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கும் அறிவிப்புகள் குடியிருப்புப் பகுதிகளில் வெளியிடப்படுகின்றன. தில்லியில் வீடு வீடாகச் போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று காவல்துறை மக்களிடம் கூறி வருகிறது.

நாம் ஏன் பங்கேற்கக் கூடாது? போராடுவது நமது அடிப்படை உரிமை. சட்டப்பிரிவின் 19 ஆவது பிரிவு, ஜனநாயக மற்றும் அமைதியான முறையில் போராடுவதற்கான அடிப்படை உரிமையை நமக்கு வழங்குகிறது. அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். அவர்கள் என்னைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்காகவும் இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று அபிஜீத் தீப்கே தெரிவித்தார்

Summary

Abhijit Deepke, leader of the Cockroach Janata Party, stated on Saturday (Oct. 10) that Prime Minister Narendra Modi fears the people will not vote for him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.