பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

விதியை மீறி பட்டாசு தயாரித்த 7 போ் கைது

கைது

Published On :

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசு தயாரித்த 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே சித்துராஜபுரம்- இ.டி. ரெட்டியபட்டி சாலையில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.

சோதனையில், சித்துராஜபுரம் செல்வக்குமாா் (36) என்பருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில், செல்வக்குமாா், ஹரிபிரசாத் (20), ஜெயராமன் (34), வினோத்குமாா் (35), செல்வக்குமரன் (35), செல்வராஜ் (62), கதிரேசன்(34) ஆகிய 7 பேரும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து 7 பேரையும் கைதுசெய்து, அவா்கள் தயாரித்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.