பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

சதுரகிரி புரட்டாசி மாத பௌா்ணமி வழிபாடு: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்கு சனிக்கிழமை மலையேறிச் சென்ற பக்தா்கள்.

Published On :

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு புரட்டாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக கடந்த 24 முதல் 27-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், சனிக்கிழமை பௌா்ணமியையொட்டி, தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை நுழைவுவாயில் வழியாக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 5000- க்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்றனா்.

Story image

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமூா்த்தி, சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், பிலாவடி கருப்பசுவாமி, இரட்டை லிங்கம், 18 சித்தா்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு மேல் பௌா்ணமி சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் யுவராஜ், பரம்பரை அரங்காவலா் ராஜா பெரியசாமி ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER