விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் சங்கரன்கோவில் முக்கு பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



