
ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறி வைத்து அமெரிக்க போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பி2 ஸ்பிரிட் விமானம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த பி2 விமானத்தின் சிறப்பம்சங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அது பற்றி யாரும் அறியாத தகவல்களும் வெளியாகியிருக்கிறது. அதாவது ஒரு விமானத்துக்கு ரூ.210 கோடி டாலர்கள் - இந்திய மதிப்பில் ரூ.18,182 கோடி செலவில் தயாரிக்கப்படும் இந்த விமானத்தில், படுக்கை, கழிப்பறை, மைக்ரோவேவ் ஓபன் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகறிது.
அமெரிக்காவின் ஒய்ட்மென் விமானப் படைத் தளத்திலிருந்து பறப்பட்ட பி2 ஸ்பிரிட் விமானம் பல மணி நேரம் பறந்து, நடுவானிலிலேயே பல முறை எரிபொருளை நிரப்பிக்கொண்டுள்ளது.
துல்லியமான இலக்கைக் குறிவைத்துத் தாக்கிவிட்டு, சுவடே இல்லாமல் வான்வெளியிலிருந்து மறையும் பி2 ஸ்பிரிட் விமானம், தொடர்ந்து 37 மணி நேரம் பறந்திருக்கிறது. இடைநில்லாமல் பறப்பதால் பல சவால்களை சந்திக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்த பி2 ஸ்பிரிட் விமானம் அப்படியில்லை. இது வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் பறக்கும் ஒரு நட்சத்திர விடுதி என்கிறார்கள்.
கோசோவா போரின்போது 1999ஆம் ஆண்டுதான் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போர் இடைநில்லாமல் இயக்கப்பட வேண்டியது இருப்பதால், இந்த போர் விமானத்தில் படுக்கை வசதி இருக்கும். எப்போதும் ஒரு துணை விமானி, பணியில் இருக்கும் விமானியை மாற்றிவிட தயார் நிலையில் இருப்பார். பல மணி நேரம் தொடர்ந்து இயங்கும்போது சுழற்சி முறையில் இவர்கள் பணியாற்றுவார்கள்.
இவர்களுக்காக ஒரு உணவுக் கூடமே இருக்குமாம். அதில் மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்டவை, படுக்கை வசதியும் இருக்குமாம். ஒரு அலமாரி முழுக்க நொறுக்குத் தீனிகள், உணவுகள், சாக்லேட், சான்ட்விச், பால், குளிர்பானங்கள் நிறைந்திருக்குமாம். கழிப்பறையும் அமைந்துள்ளது.
இந்த விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப, தயார் நிலையில் பல இடங்களில் கேசி - 135 மற்றும் கேசி 46 டேங்கர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டு, நடுவானில் இவை எரிபொருளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மரின் ஒரு பகுதியாக, ஈரானுக்குள் பி2 ஸ்பிரிட் விமானம் நுழைவதற்கு முன்பே, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த் போர் விமானங்கள் மூலம் பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. உலகிலேயே அணு ஆயுதமில்லாத ஆனால் மிக சக்திவாய்ந்த குண்டுகளாகக் கருதப்படுகின்றன இவை.
“ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைகளில் முதல்கட்டமாக ஈரானில் ஃபார்டவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளவாடங்களில் இந்த பி2 ஸ்பிரிட் போர் விமானங்கள் பங்கர் பஸ்டர் குண்டுகளை சுமந்து சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஈரானின் மூன்று அணுசக்தி மையங்கள் சேதமடைந்தன.
ஆனால், அணுசக்தி மையங்களில் யுரேனியம் இருந்ததா, அணு சக்தி மையங்கள் தகர்ந்தனவா என்பதெல்லாம் வேறுகதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.