பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பற்றி..

கொடைக்கானல் குண்டாறு பகுதிகளில் காணப்பட்ட காட்டுக் கோழி

கோழி - பிரதி படம் - file

Published On :

நெடுங்காலமாக விடையில்லாத கேள்விகளுக்கு, முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்ற கேள்வியை உதாரணம் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கான விடையைத் தேடிக் கண்டடைந்துவிட்டனர்.

வெறும் வார்த்தைகளால் அல்ல, விஞ்ஞானப்பூர்வமாக கோழியா? அல்லது முட்டையா? எது முதலில் தோன்றியிருக்கும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் சொல்லியிருப்பது, முதலில், முட்டைதான் வந்திருக்கும், அதிலிருந்து கோழி வந்திருக்கலாம் என்ற கூற்றை உண்மையில்லை என்கிறார்கள். அதற்காக அவர்கள் கோழி எப்படி உருவானது என்பதை நிரூபிக்காமல், முட்டை உருவாக சாத்தியமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒன்று தவறு எனில், தன்னிச்சையாகவே மற்றொன்று சரி என்பதாகிவிடும் அல்லவா? அதுபோல.

ஷெப்ஃபீல்டு பல்கலை பேராசிரியர் தலைமையிலான குழுவினர், இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையில் கோழிதான் முதலில் வந்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ஸ்காட்லாந்து, இங்கிலாந்து விஞ்ஞானிகள், முட்டை ஓட்டின் தன்மை குறித்து சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில், அது புரோட்டீன் மூலம் உருவான மிக முக்கிய பகுதி, இது கோழியின் உள்ளிருந்து மட்டுமே உருவாக்கப்பட முடியும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

அதாவது, கோழிகளின் உள் உறுப்புகள் எவ்வாறு ஓடுகளை உருவாக்குகின்றன என்பதை ஆராய்வதும், அதனைப் புரிந்துகொள்வதும் மிக சுவாரஸ்யமானது. இது புதிய பொருள்களை வடிவமைப்பதற்கான சில ஆச்சரிய குறிப்புகளையும் கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது, ஒரு முட்டையின் ஓடு, வெளிப்புற காரணிகளால் உருவாக்கப்பட முடியாது என்பதால், கோழியிலிருந்துதான் முட்டை வந்திருக்க முடியும் என்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், அதனால், கோழிதான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்பதை வரையறை செய்கிறார்கள்.

ஆனால், கோழி எப்படி உருவானது என்பதற்கான ஆய்வுகள் நீள்கின்றன. எனவே, தற்போது கோழியிலிருந்து முட்டை வந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ நேற்றோ இன்றோ கண்டுபிடிக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Summary

Did the chicken come from the egg, or the egg from the chicken? Scientists have found the answer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.