சேவை: வேதனையை விடு; வேலையைப் பிடி!
படித்தோம்.. வேலைக்குச் சென்றோம்.. கைநிறைய சம்பாதித்தோம்.. ஓய்வெடுத்தோம்..' என்று வாழ நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் வித்தியாசமான சிந்தனையுடன், நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகா


படித்தோம்.. வேலைக்குச் சென்றோம்.. கைநிறைய சம்பாதித்தோம்.. ஓய்வெடுத்தோம்..' என்று வாழ நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் வித்தியாசமான சிந்தனையுடன், நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, அவர்களின் அரசுப்பணி கனவையும் நனவாக்கி வருகிறது இளைஞர்களின் சங்கம் ஒன்று.
இந்தச் சங்கம் திருநெல்வேலியில் உள்ள ஆறுமுகனேரி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் இளம் முன்னோடிகள் சங்கம். இது சத்தமின்றி பல சாதனைகள் செய்து வருகிறது.
இச்சங்கத்தின் செயலர் காந்திலெட்சுமணனைச் சந்தித்துப் பேசினோம்:
""எங் கள் பகு தி யிலுள்ள படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகள் எழுதி அரசுப்பணிகள் பெறவும், அவர்களுக்குச் சமூக அக்கறை, தலைமைப்பண்பு, தேசப்பற்று, மதநல்லிணக்கம், பிறருக்கு உதவும் பண்பு போன்றவற்றை வளர்க்கும் நோக்கிலும் ஜான் கென்னடி என்பவரால் இளம் முன்னோடிகள் சங்கம் 1991-ல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு சட்ட திட்டங்களுடன் இன்று வரை இச்சங்கம் இயங்கி வருகிறது.
இச்சங்கத்தின் மூலம் இதுவரை 135 பேருக்கும் மேற்பட்டோர் அரசுத்துறை அதிகாரிகளாகவும், வங்கி பணியாளர்களாகவும், கிராம நிர்வாக அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும், காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களாகவும் போட்டித் தேர்வுகள் மூலம் பதவிகளுக்குச் சென்றுள்ளனர்.
இச்சங்கத்தில் எஜூகேஷன் கமிட்டி, புக்ஸ் ஆன்ட் பீரீயாடிக்கல் கமிட்டி, கேரியர் மற்றும் கைடன்ஸ் கமிட்டி, சோசியல் சர்வீஸ் கமிட்டி, கிப்ட் மற்றும் டூர் கமிட்டி, பைனான்ஸ் கமிட்டி, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹெல்த் கமிட்டி போன்ற கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,
இவை அனைத்திலும் இச்சங்கத்தின் உறுப்பினர்களே (அதாவது இதன் மூலம் பயிற்சி பெற்று வேலை பெற்றவர்கள்) இடம் பெற்று புதிய தலைமுறை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டித் தேர்வு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
எஜூகேஷன் கமிட்டியின் மேற்பார்வையில் வாரம் முழுவதும் ஸ்போக்கன் இங்கிலீஷ் நெறி கல்வி, நாட்டு நடப்புகள் குறித்த விவாத மேடை மற்றும் வேலை தொடர்பான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல் புக்ஸ் மற்றும் பீரீயாடிக்கல் கமிட்டி போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள், தினசரி இதழ், வார மற்றும் மாத இதழ்களைத் தேர்வு செய்து வாங்கும் பணியினைச் செய்து வருகிறது. கேரியர் மற்றும் கைடன்ஸ் கமிட்டியின் பணி மிக முக்கியமானது. இந்தக் குழுதான் போட்டித் தேர்வுகள் தொடர்பான விபரங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு உரிய பயிற்சியினையும் வழங்கி வருகிறது.
இச்சங்கத்தின் ஸ்பெசாலிட்டியே மூத்த உறுப்பினர்கள் இச்சங்கத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் புதிய தலைமுறை உறுப்பினர்களுக்கு த் தங்களின் கடுமையான வேலைப்பளுவிற்கு இடையிலும் போதிய ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருவதுதான். இதற்காக யாரும் எந்தப் பணமும் பெறுவதில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு. நாங்கள் பெற்ற வாழ்க்கை போல் எல்லோரும் பெற வேண்டும் என்பதுதான் இளம் முன்னோடிகள் சங்கத்தின் நோக்கம்.. ஆசை.. எதிர்பார்ப்பு..'' என்கிறார்.
இதுபோல் ஊருக்கு ஓர் இளம் முன்னோடிகள் சங்கம் இருந்தால் உலகமே ஒளிமயமாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...