அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்! ரூ.14,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

அத்தனைக் குரங்குகளா, அத்தனை குரங்குகளா? பிழையற்ற தமிழ் அறிவோம்! - 7

வல்லெழுத்து மிகா இடங்கள் என்னென்ன? - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...

Pandia Rajan

Updated On :

வல்லெழுத்து மிகா இடங்கள்

1. அது, இது, எது முன் மிகாது.

(எ-டு) அது பெரிது, இது சிறிது, எது கரும்பு?

2. அவை, இவை, எவை முன் மிகாது.

(எ-டு) அவை சென்றன, இவை கண்டன, எவை தின்றன?

3. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு?

(எ-டு) அவ்வாறு சொன்னார், இவ்வாறு செப்பினார், எவ்வாறு கண்டார்?

4. ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்களின் முன் மிகாது.

(எ-டு) ஒரு கோடி, இரு தாமரை, அறுபதம், எழுசிறப்பு.

5. பல, சில முன் மிகாது.

(எ-டு) பல சொற்கள், சில பதர்கள், பல தடைகள், சில கனவுகள்.

6. உகர ஈற்று வினையெச்சங்கள் முன் மிகாது.

(எ-டு) வந்து சென்றான், நின்று கண்டான்.

7. அத்தனை, இத்தனை முன் மிகாது.

(எ-டு) அத்தனை குரங்குகள், இத்தனை பசுக்களா?

குறிப்பு: அத்துணை முன் மிகும்.

(எ-டு) அத்துணைப் பெயர்களா? இத்துணைச் சிறப்பா?

8. பெயரெச்சம் முன் மிகாது.

(எ-டு) ஓடாத குதிரை, வந்த பையன், பறந்த புறா

குறிப்பு: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.

(எ-டு) ஓடாக் குதிரை, பாடாத் தேனீ

9. என்று, வந்து, கண்டு முன் மிகாது.

(எ-டு) என்று சொன்னார், வந்து சென்றார், கண்டு பேசினார்.

வல்லொற்று மிகுமிடங்கள், மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை. சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

வேற்றுமை உருபுகள் (2 முதல் 7 முடிய) விரிந்து (வெளிப்படையாக) இருப்பின் வேற்றுமை விரி எனப்படும். நூலைக் கற்றான் - இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது. உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும். பால் பருகினான் - இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.

ஒரு வினைச் சொல் நிற்க, அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து, வேறொரு வினைச் சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம். (எ-டு) வந்து (முற்றுப் பெறாத வினை) நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும். இதுபோல் முற்றுப் பெறாத வினை, ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும். வந்த (முற்றுப் பெறாத வினை) பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது. இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து (வினையின் கடைசி எழுத்து) இல்லாமற் போயிருந்தால் (கெட்டிருந்தால்) அது ஈறு கெட்ட பெயரெச்சம்; அதுவே எதிர்மறைப் பொருளும் (இல்லை என்பது) தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு) உலவாத் தென்றல் - உலவாத தென்றல் என்பதில் "த்' என்னும் ஈற்றெழுத்துக் கெட்டு (இல்லாமற் போய்) உலவா என நின்று "த்' வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று. தென்றல் உலவும் (அசையும்) இது உலவாத (அசையாத) என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.

ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை. பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும். "மை' விகுதியும் கெட்டிருக்கும். (எ-டு) செந்தாமரை- இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும். (எ-டு) வட்டக்கல் - வட்டமாகிய கல். கல்லே வட்டம். வட்டமே கல்.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.