இந்த மனநோய் ஏன் வருகிறது? பரம்பரை பரம்பரையாக இந்த நோய் வருமா? என்ற கேள்விக்குத், ""தாய், தந்தைக்கு இந்த மனநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் இந்நோய் வர வாய்ப்புண்டு. ஆனால் அப்படி வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நரம்பு மண்டலத்தில் நரம்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்குக் காரணம். சிந்தனை நரம்பு மண்டலத்தைச் சார்ந்த செயல். எந்தச் சிந்தனையை வைத்துக் கொள்வது? எதை ஒதுக்குவது? போன்ற கட்டுப்பாட்டுத் திறனை இழந்துவிடுவதே இந்த நோய். இப்படி சிந்தனையைக் கட்டுப்படுத்தாமல் போவதற்குக் காரணம், நரம்பு மண்டலத்தில் உள்ள ரசாயனப் பொருளான ஸீரோ டோனினின் (நஉதஞ பஞசஐச) குறைபாடே. ஸீரோ டோனின் குறைந்துவிட்டால் சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஸீரோ டோனின் ஒருவருக்கு ஏன் குறைந்து விடுகிறது என்பதற்கான காரணத்தை அவ்வளவு துல்லியாகமாகக் கண்டுபிடித்துவிடவும் முடியாது. சாப்பிடுவதில் ஏற்படும் குறைகளினால் இந்தப் பிரச்னை வராது. அளவுக்கதிகமான துன்பம் ஒருவருக்கு வரும்போது ஸீரோ டோனின் குறைந்துவிடும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஏன் ஒருவருக்கு ஓசிடி மனநோய் வந்தது தெரியவில்லை என்பது அவருக்கு செய்யப்படும் சிகிச்சைகளில் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்துவதில்லை'' என்கிறார் உறுதியாக.