

எனக்கு வயது 60. முப்பத்துநான்காவது வயதில் அரசுப் பணியில் என் வேலையே நிறைய அலுவலகப் புத்தகங்களைப் படிப்பதும் (இர்க்ங்ள் ஹய்க் ஙஹய்ன்ங்ப்ள்) அதையொட்டி (ஈழ்ஹச்ற்ள் & சர்ற்ங்ள்) எழுதுவதும்தான். அதனால் வலது கையில் லேசான நடுக்கம் ஏற்பட்டு எழுத மிகவும் சிரமமாக இருந்ததால், இடது கையால் எழுத ஆரம்பித்தேன். நன்றாக எழுத முடிந்தது. நாட்கள் செல்லச் செல்ல இடது கை எழுத்தும் மோசமாகிவிட்டது. இதைச் சரி செய்ய முடியுமா?
வி.சாமிவேல், கூடுவாஞ்சேரி.
ஸýஸ்ருதர் எனும் முனிவர் தான் இயற்றிய ஸýஸ்ருத சம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில், கை, கால் நரம்புகளில் நடுக்கத்தை ஏற்படுத்தும் வாதம் எனும் தோஷத்தின் சீற்றத்துக்கான காரணங்களைப் பெரும் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். எத்தனையோ யுகங்களுக்கு முன்பு எழுதிய அவருடைய குறிப்புகள் இன்றளவும் சரியாக இருப்பதால், அவருடைய கருத்தை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. அவர் கூறுவதாவது:
* பலவத் விக்ரஹம் - தன்னைவிடப் பலசாலியான மனிதர்கள் அல்லது மிருகங்களுடன் சண்டையிடுதல்.
* அதிவியாயாமம் - தன் சக்திக்கு மிஞ்சிய உடற்பயிற்சி செய்தல்.
* அதிவியவாயம் - சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு.
* அத்யயனம் - அதிக நேரம் படித்தலும் எழுதுதலும்
* ப்ரபதனம் - உயரத்திலிருந்து விழுதல்
* ப்ரதாவனம் - அதிக தூரம் வேகமாக ஓடுதல்
* ப்ரபீடனம் - உடல் உறுப்புகளைக் கசக்கித் துன்புறுத்துதல்
* அபிகாதம் - கீழே விழுந்து அடிபடுதல்
* லங்கனம் - அடிக்கடி பட்டினியாயிருத்தல்
* ப்லவனம் - குதித்தல், தாண்டுதல்
* ப்ரதரணம் - நீச்சலடித்தல்
* ராத்ரி ஜாகரணம் - இரவில் கண்விழித்தல்
* பாரஹரணம் - கனமான சாமான்களைத் தலையில் சுமத்தல்
* கஜ, துரக, ரதப்பதாதிசர்யா - யானை, குதிரை, ரதம் போன்றவற்றில் ஏறி அதிக தூரம் யாத்திரை செய்தல்
* கடு, கஷாய, திக்த - காரம், துவர்ப்பு, கசப்புச் சுவை
* ரூக்க்ஷ , லகு, சீத வீர்ய - வறட்சி, லேசு, குளிர்ச்சியான உணவு
* சுஷ்க சாக, வல்லூர - நீர் வற்றி வறண்டு போன கறிகாய்கள், உலர்ந்த மாமிச வகை உணவுகள்
* வரக, உத்தாலக, சியாமாக - கேழ்வரகு, புதிய வரகு, சாமை
* முத்க, மசூர, ஆடகீ, ஹரேணு, கலாய, நிஷ்பாவ - பச்சைப் பயறு, மசூரப் பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, வேர்க்கடலை, அவரை
* அனசனம் - பசியிருந்தும் உணவைச் சாப்பிடாதிருத்தல்
* விஷமாசனம் - நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுதல்
* அத்யசனம் - அதிக அளவில் சாப்பிடுதல்
* வாதமூத்ரபுரீஷ - குடல் கீழ்க்காற்று, சிறுநீர், மலம்
* சுக்ரச்சர்திக்ஷவது - விந்து, வாந்தி, தும்மல்
* உத்கார பாஷ்ப வேக விகாதாதிபி: ஏப்பம், கண்ணீர் போன்ற இயற்கை உந்துதல்களை வலுக்கட்டாயமாக அடக்குதல்
* சீதாப்ர ப்ரவாதேஷு - குளிர்ச்சியான பருவநிலை, கருமேகம் சூழ்ந்த நாட்கள், குளிர்ச்சியான எதிர்காற்று
* கர்மாந்தே - கோடையின் இறுதியில்
* ப்ரத்யுஷஸ்ய அபரான்னே ச - விடியற்காலை மற்றும் மாலை வேளைகளிலும்
* ஜீர்ணே அன்னேச - உண்ட உணவு செரித்து வயிறு காலியாக உள்ள நிலையிலும்
வாத தோஷமானது சீற்றமடைந்து மூளையிலுள்ள நரம்புகளையும், முதுகுத் தண்டு வட நரம்புகளையும் தாக்கக் கூடும். அதுபோன்ற நிலையில், கை, கால்களிலுள்ள நரம்புகளின் செயல்கள் முடங்கி, கை நடுக்கத்துக்கும், எழுத்துத் தடுமாற்றத்துக்கும் காரணமாகிறது.
இதைக் குணப்படுத்த ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள்:
*க்ஷீரபலா, கார்ப்பாஸôஸ்த்யாதி, பலாகுடூச்யாதி போன்ற தைலங்களில் ஒன்றைத் தலையில் ஊற்றி நிறுத்தி வைக்கும் சிரோவஸ்தி எனும் சிகிச்சை முறை.
*மூலிகை இலைகளால் உடலில் பூசப்பட்ட மூலிகைத் தைலத்தின் மீது வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுத்து வியர்வை வரவழைத்தல்.
*எண்ணெய்ப் பசையுள்ளதும், சூடான வீர்யமுள்ளதும், இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளுள்ளதுமான பொருட்களைப் பேதிக்கும் வாந்திக்கும் கொடுத்துக் குடலைச் சுத்தப்படுத்துதல்.
* இதேமாதிரி குணமுள்ள பொருட்களை உணவாகவும் பயன்படுத்துதல்.
* ஆஸனவாய் வழியாக மூலிகைத் தைலம், கஷாயம் போன்றவற்றைச் செலுத்தி வாத சீற்றத்தை அடக்குதல்
* மூளை நரம்புகளையும், கைகளின் உள்ளே செல்லக் கூடிய நரம்புகளையும், வலுப்படுத்தக் கூடிய விதார்யாதிகிருதமோ, க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தோ, தசமூலரஸôயனம் எனும் லேஹ்யமோ, தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம் போன்ற அரிஷ்ட மருந்துகளோ, உடல் தன்மைக்கு ஏற்ப சாப்பிடுதல் போன்றவை சிறந்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளாகும். (தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.