நவீன ரக செல் (ஸ்மார்ட்)
போன்களைக் கையில் வைத்துள்ளவர்களா நீங்கள்? அதில் எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் என மணிக்கணக்கில் செலவிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கையையும் தெரிந்து கொள்ளுங்கள். அதிக நேரம் செல்போன் திரையை நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்குக் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நியூயார்க்கில் கண் மருத்துவக் கல்லூரியில் 23, 24 வயதுடைய சுமார் 250 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சாதாரணமாக தினசரிகள் படிக்கும்போது கண்ணுக்கும் தினஇதழ்களுக்கும் சுமார் 16 இன்ச் இடைவெளி இருக்கும். ஆனால் செல்போன்களில் எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்துவோர் 12 இன்ச், சிலர் 7 இன்ச் தூரம் மட்டுமே வைத்து அதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் கண்களில் பார்வை குறைபாடு, வறண்ட கண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தற்காத்துக் கொள்வது உங்கள் பாடு!
ஜெகன் மகால்
ஆந்திர முன்னாள் முதல்வரின் மகனும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் கட்டி வரும் புதிய வீடு மிகவும் பிரபலமடைந்துவிட்டது. அந்த வீட்டில் 200பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய மினி திரையரங்கு, நூலகம், உடற்பயிற்சிக்கூடம், ஸ்குவாஷ், டென்னிஸ் மற்றும் வாலிபால் மைதானம், 3 அடுக்கு சுரங்க கார் பார்க்கிங், 60 அறைகள்,மற்றும் குளியலறைகள் (ஒவ்வொரு அறையின் நீளமும் ஒரு படுக்கையறை அப்பார்ட்மென்ட்டின் நீளம்), இது தவிர வேலைக்காரர்கள் தங்குவதற்கு 20 குடியிருப்புகள், 2 மாடி விருந்தினர் மாளிகை உள்ளிட்டவை அமைய உள்ளன. இதற்காக ராஜஸ்தானில் இருந்து 24 ரயில் லோடுகள் சலவைக்கற்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 10 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டின் 5 மாடிகளும் சேர்ந்து சுமார் 42 ஆயிரம் சதுர அடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தந்தையின் ஆட்சிக் காலத்தில் இந்த இடம் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
சீன "ஆப்பிள்' உஷார்!
சீன செல்போன், சீன பொம்மைகள் என சீன நாட்டின் பொருள்கள் மீது ஆர்வம் உள்ளவரா நீங்கள்? சீன நாட்டில் விற்கப்படும் "ஆப்பிள்' நிறுவனத்தின் செல்போன், ஐ-பாட் போன்ற சாதனங்களை விற்கும் நிறுவனங்கள் முறையாக அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் விற்கப்படுபவை போலியான பொருள்கள் அல்ல. வெளிநாடுகளில் முறையாக வாங்கப்பட்டு, சீன நாட்டுக்கு கடத்தப்படுகிறது. வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் வியாபார நோக்கர்கள். புகழ் பெற்ற பிராண்டுகளின் சாதனங்களைப் போன்று போலியாக தயாரிக்கப்படும் பொருள்களும் அதிகரித்து வருகிறது. இது போன்று போலியாக தயாரிக்கும் பொருள்களுக்கு சீன நாட்டில் தடைவிதித்துள்ள போதிலும் அவை, முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் அமெரிக்காவின் ரூ. 4,800 கோடி மதிப்புள்ள மென்பொருள்களின் நகல்களைப் பயன்படுத்தி வருகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
50 ஆயிரம் போலிகளை உருவாக்கிய 90 வயது மனிதர்
50 ஆயிரம் போலி டாக்டர்களை உருவாக்கிய 90 வயது மனிதர் விரைவில் கைது செய்யப்படலாம். இது நடந்தது அயல் நாட்டில் அல்ல. இந்தியாவில்தான். அதுவும் தலைநகர் தில்லியில். 1995-ம் ஆண்டு முதல் தன் வீட்டில் தில்லி மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் மருத்துவக் கல்லூரி நடத்துவதாகக் கூறி போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளார். தில்லியில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்பட்ட டாக்டர்களைக் காட்டிலும் 5 மடங்கு அதிக போலி டாக்டர்களை இவர் உருவாக்கியுள்ளார். அரோரா என்ற இந்த நபர் ஏற்கெனவே இதே குற்றத்துக்காக 2000-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பின்னரும் இதே தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டார். நாட்டில் உலவும் 2 லட்சம் போலி டாக்டர்களில் 50 ஆயிரம் பேர் தலைநகர் தில்லியிலே உலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ""கிராமங்களில் ஏராளமான பேர் டாக்டர்கள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்காகவே சிறு பயிற்சிகள் அளித்து டாக்டர்களை உருவாக்குகிறேன். இதில் என்ன தவறு?'' என்கிறாராம் மனிதர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


