ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எலிகளைக் கொல்லும் தாவரம்!

செடி, கொடி, கீரைகளை எல்லாம் நாம் சைவ உணவு என்று சொல்வோம். ஆனால் அந்தச் செடி கொடிகளே அசைவ உணவுகளைச் சாப்பிடக் கிளம்பிவிட்டது என்றால்... காலம் கெட்டுவிட்டது என்று புலம்பாதீர்கள்! புகழ்பெற்ற தாவரவியல் வி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:08 am

ந. ஜீவா

செடி, கொடி, கீரைகளை எல்லாம் நாம் சைவ உணவு என்று சொல்வோம். ஆனால் அந்தச் செடி கொடிகளே அசைவ உணவுகளைச் சாப்பிடக் கிளம்பிவிட்டது என்றால்... காலம் கெட்டுவிட்டது என்று புலம்பாதீர்கள்!

புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான குழு, அண்மையில்  பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப் பகுதியில் ஆராய்ச்சி செய்து, மாமிசம் உண்ணும் தாவரமிருப்பதாக அறிவித்துள்ளது. அந்தத் தாவரத்தின் பெயர் "நேபன்தஸ் அட்டன்பரோகி'.

நான்கு அடி உயரமுள்ள அந்தச் செடியின் இலைகளின் மேல் அமரும் எலிகள் போன்ற உயிரினங்களை அப்படியே "லபக்கி'விடுகிறது இந்தச் செடி. அதனுடைய இலையில் ஒரு வழுவழுப்பான என்ûஸம் சுரக்கிறது. அந்த என்ûஸம் அதன் மேல் படும் எந்த உயிரினத்தையும் கொன்றுவிடும் தன்மை உள்ளது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள், பூரான் போன்றவை எல்லாம் இந்தச் செடியின் கொலை வெறிக்குப் பலியாகிவிடுகின்றனவாம்.

மாமிசம் சாப்பிடும் இந்தத் தாவரத்தைக் கண்டுபிடித்திருப்பது தாவரவியல் உலகில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தச் செடி கிடைத்தால் வீட்டுக்கு ஒன்று வளர்க்கலாமே! என்கிறீர்களா?

நம் மண்ணில் வளருமோ, என்னமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.