ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நெட் ஜோக்ஸ்...

பாரில் அமர்ந்திருந்த ஒருவர் அடிக்கடி சரிந்து விழுவதைப் பார்த்த பார் உரிமையாளர் அங்கிருந்த ஒருவரை அழைத்து, அளவுக்கு மீறி குடித்துள்ள இவரை அவரது வீட்டிற்கு கொண்டுபோய் விட முடியுமா? என்று கேட்டார். அவரும

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:46 pm

பாரில் அமர்ந்திருந்த ஒருவர் அடிக்கடி சரிந்து விழுவதைப் பார்த்த பார் உரிமையாளர் அங்கிருந்த ஒருவரை அழைத்து, அளவுக்கு மீறி குடித்துள்ள இவரை அவரது வீட்டிற்கு கொண்டுபோய் விட முடியுமா? என்று கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். காரில் அழைத்துச் சென்றபோது அவர் குறிப்பிட்டுக் காட்டிய வீட்டில் தூக்கிக் கொண்டு போய் இறங்கியவுடன், அவரது மனைவி கொண்டு வந்துவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். பின்னர் கேட்டார் ""அது சரி இவரது சக்கர நாற்காலி என்னவாயிற்று?''

விருந்தொன்றில் கலந்து கொண்ட வழக்கறிஞரும் மருத்துவரும் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு அவகாசமின்றி மருத்துவரைச் சந்தித்தவர்கள் எல்லாம் தங்கள் நோய்களைப் பற்றிக் கூறி இலவசமாக மருந்துகளை கேட்டு எழுதி வாங்கிக் கொண்டனர். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் டாக்டர் வழக்கறிஞரிடம் கேட்டார், ""நீங்கள் வெளியில் வரும்போது உங்களிடமும் ஆலோசனை கேட்பவர்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?'' அதற்கு வழக்கறிஞர்,""ஆலோசனை கூறிய பின்பு அதற்குரிய கட்டணத்தைக் கேட்டு அவர்களுக்கு கடிதமெழுதுவேன்'' மருத்துவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அது சரியாகவே தோன்றியது. இனி தன்னிடம் இலவசமாக மருத்துவ ஆலோசனை கேட்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பதென தீர்மானித்தார். மறுநாள் அவரது கிளினிக்கிற்கு வக்கீலிடமிருந்து வந்த கடிதத்தில் முந்தைய தினம் ஆலோசனை கூறியதற்காக 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் அனுப்பும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

நோயாளியைப் பரிசோதித்த டாக்டர் சொன்னார், ""உன்னுடைய வியாதி என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகமாக குடித்திருப்பதுதான் காரணமென்று நினைக்கிறேன்''

""அப்படியானால் உங்கள் போதை தெளிந்த பின்பு வருகிறேன் டாக்டர்'' என்று கூறியபடியே எழுந்து சென்றார் நோயாளி.

கட்டடத் தொழிலாளி ஒருவர் 15-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இறந்து போனார். மேலுலகம் சென்றபோது வாசலில் இருந்த செயின்ட் பீட்டர், ""மகனே, மிகவும் வருந்துகிறேன். உன்னை நரகத்திற்கு அனுப்பும்படி உத்தரவு வந்துள்ளது'' என்றார். நரகத்தின் வாசலில் இருந்த சாத்தான் அவனை வரவேற்று, ""உன்னை எண்ணெய் கொப்பரையில் போடப் போகிறோம் தயாராக இரு'' என்றது. சற்றுமுற்றும் பார்த்த கட்டடத் தொழிலாளி ""நீ என்னை எண்ணெய் கொப்பரையில் போடுவது குறித்து வருத்தப்படவில்லை. ஆனால் இந்த இடம் பாழடைந்துள்ளது. இதையெல்லாம் சீரமைத்துத் தருகிறேன். பிறகு உன் இஷ்டப்படி செய்'' என்றான். சாத்தானும் ஒப்புக்கொண்டது. அந்த இடத்தில் பழுதடைந்திருந்த பகுதிகளையெல்லாம் சீரமைத்து சொர்க்கம் போல் மாற்றினான். இதுதவிர ஏ.சி., பால்கனி, நீச்சல் குளம் என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான். மகிழ்ச்சியடைந்த சாத்தான் அவனை அங்கேயே வைத்துக் கொண்டது.

சில நாட்கள் கழித்து செயின்ட் பீட்டர் சாத்தானிடம் சொன்னார் ""முன்பு நான் உன்னிடம் அனுப்பிய கட்டடத் தொழிலாளியை சொர்க்கத்திற்கு அனுப்பு. நான் அவனை தவறுதலாக உன்னிடம் அனுப்பிவிட்டேன். திரும்பவும் அவனை இங்கே அனுப்பி வை'' என்றார். சாத்தான், ""அதெல்லாம் முடியாது. எங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் அவன் செய்து கொடுத்துள்ளான். அவனை நாங்கள் இங்கேயே வைத்துக்கொள்கிறோம்'' என்று சாத்தான் பதிலளித்தது. ""அனுப்பி வை இல்லையென்றால் உன்னை நாட்டாண்மையிடம் ஒப்படைக்க வேண்டி வரும்'' என்றார் பீட்டர். சாத்தான் சிரித்தபடியே சொன்னது ""அதுவும் சரிதான். ஆனால் நீங்கள் பஞ்சாயத்து நடத்தும் ஆட்களைத் தேடி எங்கே போவீர்கள்? அவர்கள் எல்லோரும் இங்குதானே இருக்கிறார்கள்''

அ.குமார்

""சார், நான் மாசமா இருக்கேன்''

""அதுக்கு என்னம்மா?''

""நீங்கதானே சார் சொன்னீங்க, மாசமானா சம்பளம் தரலாம்னு''

""கிணறு தோண்டீனீங்களே, தண்ணி எப்படி?''

""இளநீர் மாதிரி''

""அவ்வளவு இனிப்பா இருக்கா?''

""இல்லை ஒரு இளநீர்ல எவ்வளவு தண்ணி இருக்குமோ அவ்வளவுதான் இருந்தது''

""டாக்டர் ஆபரேஷனுக்கு அப்புறம் எல்லாம் பாதி பாதியா தெரியுது''

""இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா ஆபரேஷனுக்கு அப்புறம் ஃபீûஸ வாங்கியிருப்பேன்''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.