29 படங்கள்!
யாருமே செய்யாத வித்தியாசமான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று நினைப்பவர் ஜெ.கீர்த்தி. சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி. 2008 இல் அவர் 1330 திருக்குறளுக்கும் ஓ


யாருமே செய்யாத வித்தியாசமான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று நினைப்பவர் ஜெ.கீர்த்தி.
சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி.
2008 இல் அவர் 1330 திருக்குறளுக்கும் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்தார். பலரும் பாராட்டினார்கள்.
தற்போது?
சுற்றுப் புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியங்களை சென்னை மெரீனா கடற்கரையில் காலை 9.00 மாலை 6.00 வரை (இந்தக் கொளுத்தும் வெயிலில்) வரைந்திருக்கிறார்.
வரைந்து தள்ளிய ஓவியங்களின் எண்ணிக்கை 29.
அப்படியென்ன ஆர்வம் சுற்றுச் சூழல் பாதுகாப்பில்? என்று கேட்டோம்.
""பூமி சூடாகிக் கொண்டே போகிறது. மக்கள் இதனால் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் இந்தப் பாதிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.
ஒருவரிடம் இதைப் பற்றிப் பேசி விளக்குவதைவிட ஓவியங்களின் மூலம் விளக்குவது மிகவும் எளிது என்பதால் சென்னையில் பலரும் கூடும் மெரினா கடற்கரையில் காலை 9.00 மணியளவில் ஓவியங்களை
வரைய ஆரம்பித்தேன்.
உலக உருண்டையின் மீது இரண்டு செடிகள் இருப்பதைப் போல ஒரு படம். உலக உருண்டையின் மேல் அகோரமான கால், அதை இரண்டு பையன்கள் பிடித்து இழுப்பதைப் போல இன்னொரு படம்.
உலகம் சைக்கிள் ஓட்டுவதைப் போல ஒரு படம்.
மழைநீர் சேகரிப்பு பற்றி ஒரு படம் என 29 படங்களை வரைந்தேன்.
நிறையப் பேர் ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் என்னால் முடிந்த ஒரு பணியைச் செய்த திருப்தி எனக்குக் கிடைத்திருக்கிறது'' என்கிறார் அந்தச் சாதனைப் பெண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...