சாதனை படைக்கவென்றே சில பேர் அலைந்து கொண்டிருப்பார்கள்.
அவர்களில் ஒருவர் ட்ரம்ஸ் ஸ்ரீதர். ஏற்கெனவே 24 மணி நேரம் தொடர்ந்து ட்ரம்ஸ் வாசித்து இன்டியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இடம் பிடித்தவர் அவர்.
அவரின் தற்போதைய சாதனை தொடர்ந்து 24 மணி நேரம் டர்புகா வாசித்து அதே இன்டியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.
இதே சாதனை ஆசியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸýக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இடம் பிடிப்பேன் என்கிறார் அவர் உறுதியாக.
அதென்ன டர்புகா? என்று கேட்டோம்.
""டர்புகா என்பது ஓர் அரபி இசைக் கருவி. அரபு பாணியில் உள்ள திரைப்படப் பாடல்களுக்கு இந்த இசைக் கருவியை வாசிப்பார்கள்.
ட்ரம்ஸ் வாசிப்பதில் நல்ல பயிற்சி உள்ள எனக்கு இந்தக் கருவியை வாசிப்பது அவ்வளவு சிரமமாகத் தெரியவில்லை.
இந்த மாதம் 10 ஆம் தேதி காலை 9.00 மணியில் இருந்து இரவு 9.45 வரை சென்னை அபிராமி மெகா மாலில் வாசித்தேன். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை 15 நிமிடங்கள் ஓய்வு. அந்த நேரத்தில் ஒரு டாக்டர் வந்து
என் உடல் நிலையைச் சோதனை செய்தார்.
பல்வேறு ரிதங்களுக்கு ஏற்ப "úஸாலோ'வாக நான் தொடர்ந்து வாசித்ததைப் பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில்
இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸýக்காக பலர் பலவிதமான சாதனைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள். தலையில் ஓடு உடைப்பது, பாட்டிலில் படுத்துக் கிடப்பது என்று. அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக என் டர்புகா வாசிப்பு அமைந்திருந்தது.
ட்ரம்ஸ் என்றால் ஸ்டிக் கொண்டு வாசிக்கலாம். வெறும் கைகளினால் டர்புகா வாசித்ததால் இந்நிகழ்ச்சி நடந்து நான்கு நாட்களாகியும் கையைத் தூக்கவே
முடியவில்லை'' என்கிறார் ட்ரம்ஸ் ஸ்ரீதர், பெருமையின் "வலி'யோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


