தகவல் தர வற்புறுத்துவது சரியா?
சிலநேரங்களில் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடி இருக்கும். அம்மாதிரி நேரங்களில் சட்டத்தைப்பாதுகாக்கும் அமைப்புகளுக்கு அடிப்படையான பல தகவல்கள் தேவைப்படும். குற்றச் செயல்களில் ஈடுபட்ட


சிலநேரங்களில் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்க
வேண்டிய நெருக்கடி இருக்கும். அம்மாதிரி நேரங்களில் சட்டத்தைப்பாதுகாக்கும் அமைப்புகளுக்கு அடிப்படையான பல தகவல்கள் தேவைப்படும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் தடுமாறிக்
கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதிரி திரட்டப்பட்ட தகவல்கள் நிச்சயம் உதவும்.
வாடகைக்குக் குடியிருப்பவர்கள் பற்றிய தகவல் திரட்டுவது வீட்டு உரிமையாளர்களுக்கு ஒருவேளை உகந்ததாக இருக்கலாம். ஆனால் வெளிமாநில மாணவர்களைப் பற்றித் தகவல் திரட்டுவது தேவையற்றது. எதற்காக வெளிமாநில மாணவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யார் மேல் சந்தேகம் இருக்கிறதோ அவர்களைப் பற்றி மட்டுமே தகவல்களைத் திரட்ட முடியும். இதனால் குற்றம் செய்யாத மாணவர்கள் அவர்களைப் பற்றித் தகவல் திரட்டப்படுவதிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 90 சதவீத வெளிமாநிலத் தொழிலாளர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். ஒரு சில குற்றவாளிகள் இருக்கலாம். அவர்களை மட்டுமே கண்காணிக்க முடியும்.
காவல்துறை உயர்பொறுப்பில் இருந்த இருவரின் கருத்து மேற்கண்டவாறு இருக்க, இங்கே வழக்கறிஞர் ஒருவரின் கருத்து:
எஸ்.சண்முகசுந்தரம்,
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்
விடுகளில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை - அவர்களுடைய புகைப்படத்துடன் , வீட்டு உரிமையாளர்கள் காவல்துறைக்குத் தர வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதே என் கருத்து.
இந்திய அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 19 (1) (இ) - இன் படி இந்திய குடிமக்கள், இந்திய எல்லைக்குள், தாம் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும், தங்குவதற்கும் உரிமை பெற்றுள்ளார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமை.
அப்படியிருக்கும்போது தமிழகத்தில் யாரெல்லாம் வாடகைக்குக் குடியிருக்கிறார்களோ அவர்கள் அனைவரின் விவரங்களையும் பதிவு செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு, தமிழகம் முழுவதும் வாடகைக்குக் குடியிருப்பவர்களின் விவரங்களைக் கேட்பது, அடிப்படை உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகும். காவல்துறை தானாகவே பிறப்பிக்கும் ஆணையாகவே இது இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் சிலர் மீது காவல்துறைக்கு ஏதாவது சந்தேகம் இருக்குமானால், சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை அவர்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
வாடகைக்குக் குடியிருப்பவர்கள் எல்லாருடைய விவரங்களையும் கேட்பது சரியல்ல.
வாடகைக்குக் குடியிருப்பவர்கள் எல்லாருமே ஏதாவது தப்பு செய்வார்கள் என்ற தவறான மனப்பான்மையை இது ஏற்படுத்திவிடக்கூடும். மேலும் குற்றச் செயல்களைப் பொறுத்தவரை சொந்த வீட்டுக்காரர், வாடகைக்குக் குடியிருப்பவர்கள் என்று பாகுபடுத்திப் பார்ப்பதும் பொருத்தமற்றது.
காவல்துறையினர் ஏதாவது ஆணையிட்டால் குடிமக்கள் உதவி செய்ய வேண்டும் என்பது பொதுவிதி. உதாரணமாக, விசாரணைக்குக் கூப்பிட்டால் வந்து ஆஜராக வேண்டும். ஆஜராகவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம்.
ஆனால் வாடகைக்கு இருப்பவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என்ற காவல்துறை ஆணைக்குக் கீழ்ப்படியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறுவது பொருத்தமற்றது.
ஏனெனில் இந்திய குடிமக்கள் இந்தியாவின் எல்லைக்குள் தாம் விரும்பிய இடத்தில் குடியிருக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறது. அதைப் பற்றிய விவரங்களை யாருக்கும் தர வேண்டிய அவசியமுமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...