நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐயங்கார் பேக்கரி!

ஐயங்கார் பேக்கரி என்றதும் எல்லோருக்கும் தமிழ்நாட்டு ஐயங்கார்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால்

News image
Updated On :22 ஜூன் 2013, 6:59 am

ராஜி

ஐயங்கார் பேக்கரி என்றதும் எல்லோருக்கும் தமிழ்நாட்டு ஐயங்கார்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் இவர்கள் கர்நாடகாவில் ஹாசன் ஜில்லாவில், அஷ்டகிராமா கிராமங்களைச் சார்ந்தவர்கள். முதல் ஐயங்கார் பேக்கரி பெங்களூரில் சிக்பட் பகுதியில் 1898-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

முதலில் பட்சணங்கள் செய்து விற்று வந்த இவர்களுக்கு, பன், கேக் போன்ற பேக்கரி பொருட்களைச் செய்யக் கற்றுக் கொடுத்தவர் ஓர் ஆங்கிலேயர். அவர் பெங்களூரில் உள்ள வெஸ்ட் என்ட் ஹோட்டலில் வேலை செய்தவர். அவர் வழக்கமாக ஸ்வீட் கடைக்கு வந்து பேக்கரி பொருட்கள் செய்ய கற்றுக் கொடுத்தார்.

இதனால் இனிப்பு கடை, பேக்கரியாக உருமாறியது. பிறகு இந்த ஐயங்கார் கிராமத்திலிருந்து வந்தவர்கள் பலர், இங்கே தொழில் கற்றுக்கொண்டு சுயமாய் கடை வைக்க ஆரம்பித்தார்கள்.

இன்று பெங்களூரில் மட்டும் 500 ஐயங்கார் பேக்கரிகள் உள்ளன. இவற்றில் 20 பேக்கரிகள் மட்டுமே ஒரிஜினல் அஷ்டகிராமா கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது! இவர்களிடம் 2 அங்குல பன் மிகவும் பிரபலம்! மாவு பண்ட கடைகள், கப் கேக் தொழில்கள் பெருத்துவிட்டதால், இன்று ஐயங்கார்கள் திணறுகின்றனர் என்பதே உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.