ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மூளையைப் பாதிக்கும் பத்து பழக்கங்கள்

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத்

News image
Updated On :9 மார்ச் 2014, 6:43 am

1.   காலையில் உணவு உண்ணாமல் இருப்பது:

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துகளையும் கொடுக்காமல் செய்து மூளை அழிவுக்குக் காரணமாகிவிடும்.

  2.   மிக அதிகமாகச் சாப்பிடுவது: இச்செயல் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகிவிடும். இது மூளையின் சக்தி குறைவுக்கு வழி வகுக்கும்.

  3.   புகைபிடித்தல்: மூளை சுருங்கவும் "அல்சமைர்ஸ்' வியாதி வருவதற்கும் புகைபிடித்தல் காரணமாகிறது.

  4.   நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய சர்க்கரை சாப்பிடுவது புரோட்டீன் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகிறது.

  5.   மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றைச் சுவாசித்தல் நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

  6.   தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

  7.   தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்கும்போது போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனைக் குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

  8.   நோய் வாய்ப்பட்ட காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலையைக் கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால் மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

  9.  உடல் ஆரோக்கியத்துடன் இருக்கையில், மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது எப்போதும் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருப்பது நல்ல செயலாகும். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை  மேற்கொள்வதால் மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10.   பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.