அப்படீங்களா!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, செல்போனும் நஞ்சு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, செல்போனும் நஞ்சு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் மூளையில் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகுகின்றனவாம். அதிக பாதிப்பில்லாமல் செல்போனை எப்படிப் பயன்படுத்தலாம்?
செல்போனை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். பேசுவதற்குப் பதில் எஸ்எம்எஸ் அனுப்பலாம். லேண்ட் லைனில் பேசலாம்.
சட்டைப் பாக்கெட்டிலோ, பேண்ட் பாக்கெட்டிலோ அதிக நேரம் செல் போனை வைக்கக் கூடாது. இதயம், விதைப் பை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். முடிந்த அளவு செல்போனை உங்களுடன் ஒட்டாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சிக்னல் குறைவாக இருக்கும் நேரத்தில் பேசினால் கதிர்வீச்சுப் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
காதில் வைத்துப் பேசாமல், ஹெட் போனில் பேசாமல் செல் போன் ஸ்பீக்கரைப் பயன்படுத்திப் பேசுவது சிறந்தது, பக்கத்தில் உள்ளவர்கள் உங்களை அடிக்க வராமல் இருந்தால். பிறருக்குப் போன் செய்யும்போது ரிங் போகும்போது போனைக் காதில் வைக்க வேண்டாம். அந்தச் சமயத்தில் சாதாரண நேரங்களைவிட பல மடங்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...