செவித்திறன் குறைந்து போனால்...!

பிரச்னைக்கு ஊசிபோட்டுக் கொண்டதில் என்னுடைய செவித்திறன் குறைந்து தற்போது காது கேட்கும் கருவி பொருத்தியுள்ளேன்.
செவித்திறன் குறைந்து போனால்...!
Updated on
2 min read

பிரச்னைக்கு ஊசிபோட்டுக் கொண்டதில் என்னுடைய செவித்திறன் குறைந்து தற்போது காது கேட்கும் கருவி பொருத்தியுள்ளேன். செல்போன் மணி அடித்தால் கூட கேட்பதில்லை. சர்க்கரை நோய் பாதிப்பினால் கண்களில் லேசான உறுத்தலும், நீர் வடிதலுமுள்ளது. இவை நீங்க ஆயுர்வேதம் உதவுமா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பினால் காது மற்றும் கண்களைச் சார்ந்த நரம்புகள் பாதிப்படைந்துள்ளன என்று தெளிவாகத் தெரிகிறது. வாயுவின் ஆதிக்கப் பகுதியாகிய காதுகளில் இதுபோன்ற மருந்துகளின் வீரியத்தினால் சீற்றமுற்று அங்குள்ள நரம்புகளை வலுவிழக்கச் செய்யக்கூடும். வாயுவின் வறட்சி, குளிர்ச்சி, லேசான தன்மை ஆகியவற்றால் நரம்புகளிலுள்ள நெய்ப்புத் தன்மையானது குறைந்து போவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாக இதைக் குறிப்பிடலாம். மூளையிலிருந்து பெறப்படும் உத்தரவுகளைச் செயலாற்றும் தன்மை இதனால் பாதிக்கப்பட்டு செவித்திறன் சத்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். நீங்கள் குறிப்பிடும் மருந்தை நிறுத்தினால் செவித்திறனுடைய கேட்கும் சக்தியானது மேலும் குறையாதிருக்கலாம். ஆனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பஆ நோயானது குணமாகுமா? என்றொரு சந்தேகம் எழலாம். அதனால் பஆக்குரிய மாத்திரையை நிறுத்தக்கூடாது. அதேசமயம், செவியின் நரம்புகள் பலவீனமும் அடையக்கூடாது என்ற வகையில் தங்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது. கார்ப்பாஸôஸ்த்யாதி எனும் தைல மருந்தை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கி பொறுக்கும் சூட்டில் இதமாக வரும்படி செய்து பஞ்சில் முக்கிக் காதினுள் சொட்டு சொட்டாக விட்டு காதை நிரப்பும் சிகிச்சை மிகவும் நல்லது. காலையில் பல் துலக்கிய பிறகு இதுபோன்று செய்து கொள்ளலாம். சுமார் 5 அல்லது 10 நிமிடங்கள் வரை ஒரு செவியினுள் விட்டு நிறுத்தி அதன் பிறகு எண்ணெய்யை வடித்து விடலாம். மற்றொரு காதிலும் இதேபோல செய்து கொள்ளலாம். தலைக்கு குளிர்ந்த நீரை விட்டுக் கொள்ளாமல் ஆறிய வெந்நீரில் குளிப்பது நல்லது.

சர்க்கரை நோயின் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள கண் பிரச்னை தீர திரிபலை எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயின் சூரணத்தை ஒரு ஸ்பூன் அதாவது 5 கிராம் எடுத்து 300 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 150 மி.லி. ஆக வற்றியதும் குளிர்ந்த பின்னர் வடிகட்டி ஒரு பஞ்சினால் முக்கி கண்களைக் கழுவப் பயன்படுத்தலாம். இதனால் பல கண்கோளாறுகள் குணமடையக்கூடும். இதே திரிபலையை 3 ஸ்பூன் அதாவது 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை லிட்டராகக் சுண்டியதும் வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறுகச் சிறுகப் பருகுவதனால் சர்க்கரையின் தாக்கம் குறைவதுடன் கண் நரம்புகளையும் அது வலுப்படுத்தக் கூடும்.

ஆங்கில மருத்துவரிடம் நீங்கள் சாப்பிடும் மருந்தினுடைய வீரியம் இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமா? என்று கேட்டறிந்து மருந்தினுடைய அளவைக் குறைப்பதோ அல்லது மாற்றவோ செய்யலாம். ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த மருந்தையும் தொடர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது அம்மருந்தினை எழுதித் தரும் மருத்துவரிடம் எடுத்துரைத்து அதற்கான மாற்று மருத்துவ சிகிச்சைகளைச் செய்து கொள்வதே தரமானது.

சிதோபலாதி சூரணம், தாளீசாதி சூரணம், இந்துகாந்தம் க்ருதம், ஹரித்ராகண்டம், அகஸ்த்யரஸôயனம், வியோஷாதிவடகம், தாளீசாதிவடகம், வாசாரிஷ்டம், தசமூலாரிஷ்டம், ஆஷால்யாதிகுடிகா போன்ற தரமான மருந்துகள் பஆ நோய்க்கு மருத்துவ ஆலோசனைப்படி கொடுக்கப்படவேண்டியவை. கதககதிராதி கஷாயம், சந்த்ரப்ரபா குடிகா, நிஷாமலகீ சூரணம், நிரூர்யாதி குடிகா, கண்மதம் எனப்படும் சிலாசத்து பற்பம், தான்வந்திரம் க்ருதம், திரிபலாசூரணம் போன்ற சர்க்கரை உபாதைக்கான மருந்துகளையும் சரியானபடி பயன்படுத்தி வந்தால் சர்க்கரை உபாதையின் தாக்கத்தைக் குறைத்து அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நம்மால் குறைக்க இயலும். பஞ்சகர்மா எனப்படும் சிகிச்சை முறைகளால் உடலில் ஏற்பட்டுள்ள பல பாதிப்புகளையும் நம்மால் நீக்க இயலும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com