தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எப்படிப் பாடுவேன்!

மகாகவி பாரதியின் எழுத்துகள் கவிதையாய் உருக்கொண்டு நாட்டு விடுதலைக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்தது என்பதில் தமிழர்களான நமக்கு மகிழ்ச்சியும், பெருமையையும் தந்தாலும், அவரின் ஏழ்மை நிலை கண்டு கண்ணீர் சிந்தும் நிலையை ஏற்படுத்துகிறது "சித்துக்கடல்' எனும் தலைப்பில் தனது நாட்குறிப்பில் பாரதியார் எழுதியிருந்த செய்திகள்.

News image
Updated On :5 மார்ச் 2016, 12:50 pm

வீர . செல்வம்

மகாகவி பாரதியின் எழுத்துகள் கவிதையாய் உருக்கொண்டு நாட்டு விடுதலைக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்தது என்பதில் தமிழர்களான நமக்கு மகிழ்ச்சியும், பெருமையையும் தந்தாலும், அவரின் ஏழ்மை நிலை கண்டு கண்ணீர் சிந்தும் நிலையை ஏற்படுத்துகிறது "சித்துக்கடல்' எனும் தலைப்பில் தனது நாட்குறிப்பில் பாரதியார் எழுதியிருந்த செய்திகள். ஆம், அவ்வரிகளைப் படித்து கண்ணீரால் அஞ்சலி செலுத்துவோம் அந்த மகாகவிக்கு.

இதோ...

""பராசக்தி, இந்த உலகின் ஆத்மா நீ, உனக்கு அறிவில்லையா? உனக்கு காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டு பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களைக் கொடுத்து விடக்கூடாதா? கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜூரம் வந்தது... வைத்தியனுக்கு கொடுக்க பணம் இல்லையே. குழப்பம், குழப்பம், தீராக்குழப்பம், எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருடங்கள்! தாயே, என்னைக் கடன்காரன் ஓயாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்? செட்டி பணத்துக்கு எத்தனை நாள் வாய்தா சொல்லுவது? பொய் வாய்தா. பொய் வாய்தா. தினமும் இந்தக் கொடுமைதானா? சீச்சி..!''

இது பாரதியார் தனது டைரியில் 2.7.1915 இல் எழுதியது.

விடுதலைப் போரில் தமிழகம்- என்ற புத்தகத்தில் ம.பொ.சி எழுதியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.