மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ராகம் தெரிய வேண்டுமா?

நீங்கள் இசைப் பிரியரா?  கர்நாடக இசைக் கச்சேரியில் ராகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று வருந்துகிறீர்களா?  15-10-2017 அன்று காலை சென்னை மியூசிக் அகாதெமியில் ராகம் கண்டுபிடிக்கும் போட்டி 

News image
Updated On :11 நவம்பர் 2017, 6:30 pm

நீங்கள் இசைப் பிரியரா?  கர்நாடக இசைக் கச்சேரியில் ராகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று வருந்துகிறீர்களா?  15-10-2017 அன்று காலை சென்னை மியூசிக் அகாதெமியில் ராகம் கண்டுபிடிக்கும் போட்டி 

முடிந்தவுடன், டாக்டர் ஸ்ரீராம் பரசுராம் பேச்சு - செய்முறை மூலம் ராகம் தெரிய சில வழிகளைச் சொன்னார்.   டாக்டரின் உரையின் சாராம்சம்: (என் சொந்த அனுபவம் சிறிது கலந்துள்ளது)

முதலில் ராகத்தின் லட்சணம் மனத்துள் பிடிபட வேண்டும்;  கேட்டுக் கேட்டுத்தான் இந்தத் தன்மை பதியும். டாக்டர் அன்று ஸ்வரப் பிரயோகங்களுடன் சாவேரி ராகத்தை ஒரு நிமிடம் பாடினார். எல்லோருக்குமே இது 

"சாவேரி' என்று உடனே புரிந்தது, அந்த ராகத்தில் "கொக்கி' போல ஒரு பிரயோகம் வரும்.

"தெலியலேது ராமா'வை உணர்ச்சிபூர்வமாகப் பாடிக் காண்பித்தார்.  ""எல்லோருமே "தேணுகா' என்று சொல்லி விடுவீர்கள். ஆனால், இதை ஆலாபனை செய்தால் எத்தனை பேருக்குப் புரியும்?'' (ஆலாபனை செய்தார்)  

""காரணம் என்னவென்றால், கேட்டுக் கேட்டு சில பாட்டுக்கள் ஆழ்மனத்தில் பதிந்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ராகத்தின் ஆலாபனை படியவில்லை.

பாடகர்  ஆரம்பித்த  உடனேயே  ராகத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று துடிக்காதீர்கள். கொஞ்சம் காத்திருங்கள். ஏனெனில், கல்யாணிபோல ஆலாபனையை இழுத்து, பிறகு அதை மோகனமாக மாற்றி விடலாம்; 

இதேபோன்று மோகனத்தில் துவக்கி கல்யாணியாகவும் மாற்றலாம். ஏன், மோகன கல்யாணியாகக் கூட இருக்கலாம். எனவே, அவசரம் வேண்டாம்.
எல்லோரும் பின்பற்றுகிற பொதுவான வசை - விலக்கி விடுகிற தன்மை (Elimination Process) அதாவது, "இந்த ராகத்தின் அம்சம் இதிலில்லை',  "இதில் இந்த அம்சம் உள்ளது'  என்று மூளையைக் கசக்கிக் கண்டுபிடிப்பது. 

ஒரே மாதிரியாக உள்ள ராகங்களைக் கண்டுபிடிக்க, இந்த உத்தி பயன்படும்.
(நான் அன்று தேவகாந்தாரி ராகத்தை அப்படித்தான் கண்டுபிடித்தேன். அதில் ஒரு "சுழற்சி'  வரும். ஜான் ஹிக்கின்ஸின் பிரபல   "எந்நேரமும் உந்தன் சந்நிதியில்'  ஞாபகம் இருக்கிறதா?)

கச்சேரியில் பாடகர் ஆலாபனையை முடித்ததும் பக்கவாத்தியக்காரர் வயலின் வாசிப்பார். அப்போது ராகத்தை உறுதிப்படுத்திக் கொள்வது எளிது.
இருக்கவே இருக்கிறது பக்கத்து ஸீட்காரரிடம் கேட்பது. ஆனால், சிலசமயம் இது தவறாக இருக்கும். அவர் உங்களைவிட விஷய ஞானம் இல்லாதவராக இருக்கக் கூடும்.

ராகங்களின் பெயரோடு சில பாடல்கள் வரும். ஊன்றிக் கவனித்துக் கேட்டால் ராகம் தெரியும். தீட்சிதர் தம்முடைய சில கிருதிகளில் இவ்விதம் செய்திருக்கிறார்.

(டாக்டர் பரசுராம் இந்துஸ்தானி ராகமான "நவ்ரோஜை'ப் பாடிக் காண்பித்தார்)
ராகங்களின் பெயர் வேறுபடும். இது பற்றிக் குழப்பம் தேவையில்லை. "கர்நாடக தேவகாந்தாரி',   "ஆபேர்'  "தேவகாந்தாரம்'  அனைத்தும் ஒன்றுதான்.
எனக்கு ஒரு நண்பரைத் தெரியும். அவர் பெயர் சுப்ரமணியன். ஆனால், நான் அழைப்பது "மணி' என்றுதான். வீட்டில் வேறு பெயராக இருக்கும். பதிவேடுகளில் சுப்ரமணியன் என்றே அமைந்திருக்கும். அதுபோலத்தான்.
 முத்தாய்ப்பாக அவர் தெரிவித்தவை: 

ஒரு சிலர் சிறந்த சங்கீத ரசிகராக இருப்பர். ராகங்கள் அவ்வளவாகத் தெரிந்திருக்காது. வேறு சிலர் ராகத்தை அடையாளம் கண்டு கொள்வதிலேயே குறியாக இருந்து இசையை ரசிக்கவே மாட்டார். நீங்கள் சங்கீத ரசிகராக இருங்கள்; கேள்வி ஞானம் மூலம் ராகத்தை எளிதில் ஊகிக்கலாம். 

ராகம் கண்டுபிடிப்பது ஒரு தொடர் பயிற்சி. On-going process. முப்பது வருட முன் பரவலாகப் பாடப்பட்ட ராகங்கள் இன்று இல்லை. ஆனால் வேறு சில பிரபலமாகப் பாடப்பட்டு வருகின்றன'' என்றார்.

ஆக, R.I.C (Raga Identification Contest) நினைவுத் திறனையும், பயிற்சியையும் ஊக்குவித்தது என்றால், டாக்டர் ஸ்ரீராமின் Lec-dem இயல்பாகவும், தன்னம்பிக்கையை வளர்ப்பதுவுமாக இருந்தது.

ஆ!  ஒன்று விட்டுப் போய்விட்டது - ""இன்றைய போட்டியில் நாற்பதுக்கு பத்து வாங்கினாலே நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்'' என்றார். எனக்கு மகிழ்ச்சி,  கிட்டத்தட்ட என் மதிப்பெண்கள் அதனருகில்!

 (என்ன ராகம் என்று 40 செகண்டுகளுக்குள் எழுத வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.