டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பேல்பூரி

தமிழ் பேசுவது அவமானம் இல்லை...அடையாளம்.

News image
Updated On :23 ஜூலை 2018, 11:43 am IST

கண்டது


(மதுரை திருநகரில் ஆட்டோ ஒன்றில்)

தமிழ் பேசுவது அவமானம் இல்லை...
அடையாளம்.

சு.இலக்குமணசுவாமி, மதுரை-6

(சென்னை வேளச்சேரியில் ஒரு துணிக்கடையின் பெயர்)

வேற லெவல்

வி.ரேவதி, தஞ்சை.

(அறந்தாங்கி சந்தைப்பேட்டை அருகில் உள்ள திருமண விழா 
அரங்கத்தில் ஒரு காதணி விழா பேனரில்)

செவிப் பொன் சேர்ப்பு விழா

ப.காளிதாசன், வேட்டனூர்.


கேட்டது


(நெய்வேலி பேருந்துநிலையம் அருகே இருவர்)

""நேத்து நாம வந்த பஸ்ஸýக்கு  "ரேட்டிங்'  கேட்டு மெயில் வந்துருக்குடா''
""2 அல்லது 3 ஸ்டார் போடு. அதுக்கு மேலே போடாதே''
""ஏன்டா?  பஸ் நல்லாத்தானே இருந்தது?''
""ரேட்டிங் ஏத்திப் போட்டா... கொஞ்ச நாள்ல ரேட்டை ஏத்திடுவாங்கடா... சொந்தக் காசுல சூன்யம் வச்சுக்கப் போறீயா?''

கி.ரவிக்குமார், நெய்வேலி.

(மதுரை முனிச்சாலை அருகே உள்ள ஒரு
கல்யாண மண்டபத்தில் இருவர்)

"" நாளைக்கு கல்யாணம் ஆகப் போற புதுப்பொண்ணு, செல்லை கையில் வைச்சுக்கிட்டு அதையே தலைகுனிஞ்சு பார்த்துக்கிட்டிருக்கு...காலம்டா இது''
""கல்யாணம் ஆகுற புதுப்பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்கணும்னு  சொல்லியிருக்காங்க. அதான்''

ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.


எஸ்.எம்.எஸ்.

உதிக்கும்போதும், 
மறையும்போதும், 
சூரியனை ரசிக்கும் உலகம்,
உச்சிக்கு வந்ததும், திட்டித் தீர்க்கும்...
சூரியனை மட்டுமல்ல,
மனிதனின் வளர்ச்சியையும் தான்!

வெ.ராம்குமார், வேலூர்.

மைக்ரோ கதை


அந்த சுவாமிஜியிடம்  பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டால் தீராத நோய் எல்லாம் தீரும் என்று சொன்னார்கள்.  பிரசாதம் வாங்க கூட்டம் அலைமோதியது.
கடைசியில் வந்த இளைஞன் சுவாமிஜியிடம் கேட்டான். ""வந்திருப்பவர்கள் எல்லாருக்கும் ஒரே நோய் இருக்காது. வேறு வேறு நோய்கள் இருக்கும். நீங்கள் ஒரே பிரசாதத்தைத்தானே கொடுத்தீங்க?  எல்லா நோயும் எப்படி குணமாகும்?''
சுவாமிஜி சிரித்துக் கொண்டே சொன்னார்:
""நோயைக் குணமாக்குவது நான் தரும் பிரசாதம் அல்ல. பிரசாதம் சாப்பிட்டால் நோய் தீரும் என்ற அவர்களின் நம்பிக்கை.''

செ.ஆசைத்தம்பி, தாரமங்கலம்.


யோசிக்கிறாங்கப்பா!

கார் வாங்க ஆசைப்பட்டு வாங்கிட்டு ஒவ்வொரு மாதமும் பல ஆசைகளைத் தியாகம் செய்யும் மடத்தனத்துக்கு பெயர்தான்...

லோன்.

ஆர்.ரவிச்சந்திரன்,  செம்பட்டி.


அப்படீங்களா!

இங்கிலாந்தில் உள்ள ஹம்மிங்பேர்ட் என்ற நிறுவனம் விதவிதமான இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கிறது.  அண்மையில் அது தயாரித்தளித்திருக்கும் ஒரு சைக்கிளின் எடை வெறும் 10.3 கிலோதான். இந்த  சைக்கிளில் 250 வாட்ஸ் பேட்டரியைப் பொருத்தியிருக்கிறார்கள்.  ஒருமுறை இந்த பேட்டரியை சார்ஜ் செய்தால், 30 கி.மீ.தூரம் வரை சைக்கிள் செல்லும்.  2 மணி நேரத்தில் இந்த பேட்டரி  சார்ஜ் ஆகிவிடும்.  இந்த சைக்கிளுடன் உங்களுடையை ஸ்மார்ட் போனை இணைத்துக் கொள்ள முடியும்.  எந்தத் திசையில் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள நேவிகேஷன்  என பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த சைக்கிளில் உள்ளன.

என்.ஜே., சென்னை-116.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.