சென்னைக்கு வந்திருக்கும் மலேசிய "தமிழ்' தூதர்!
சாதாரணமாகவே வெளிநாட்டு தூதர்கள் என்றால் அவர்களை நாம் உருவத்தைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் தற்பொழுது மலேசிய நாட்டின் தூதராக (Consul general) புதிதாக வந்திருக்கும் இவரைப் பார்த்தால்


சாதாரணமாகவே வெளிநாட்டு தூதர்கள் என்றால் அவர்களை நாம் உருவத்தைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் தற்பொழுது மலேசிய நாட்டின் தூதராக (Consul general) புதிதாக வந்திருக்கும் இவரைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டுக்காரர் போல இருக்கும் அவர், தெளிவாகத் தமிழும் பேசுகிறார். அவரது விசிட்டிங் கார்டைப் பார்த்தால் இன்னும் அதிர்ச்சி. பெயர், கே.சரவணன்.
""நான் மூன்றாம் தலைமுறை மலேசிய தமிழன்'' என்கிறார் 37 வயது நிரம்பிய அவர்.
இவர் 2005 முதல் மலேசிய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டு நாடுகளில் பணியாற்றி வித்தியாசமான அனுபவங்களைப் பெற்றுள்ளார். அந்த நாடுகள் நைஜீரியா, நெதர்லாண்ட் .
""இரண்டு நாடுகளுமே வித்தியாசமான அனுபவங்களை எனக்குத் தந்தன. நைஜீரிய பதவி நான் பெற்ற முதல் பதவி. மக்கள் அன்பானவர்கள், நட்புடன் பழகுவார்கள். முதல் பதவி என்பதால் நான் பலவிஷயங்களை இந்த பதவியில் கற்றேன் என்று கூறலாம். எப்படி ஒரு diplomat நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்றும் இந்த பதவியின் தன்மை என்ன, அவர்களுக்கு எப்படி எல்லாம் நாம் உதவ முடியும் என்றும் தெரிந்து கொண்டேன். அவர்களின் உணவு எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த பதவியில் இருப்பவர்கள் எந்த நாட்டில் வேலை செய்கிறார்களோ, அந்த நாட்டின் பழக்க வழக்கங்களுடன் இணைந்து இருக்க வேண்டும். நான் அதைப் பின்பற்றினேன். நான் அந்த நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றேன்.
நெதர்லாண்ட் என்பது மிகவும் அழகான ஒரு நாடு. அங்கு நான் அதிகம் செய்தது சட்ட சம்பந்தமான வேலைகள்தான். காரணம் இந்த நாட்டில் தான் பல்வேறு உலக நீதிமன்றங்கள் உள்ளன. உதாரணமாக ICJ, ICC, PCA. இவை மட்டும் அல்லாமல் Organization of chemical weapons conventions (OPCW) தாயகம் இங்கு தான் உள்ளது. நெதர்லாண்ட் மக்கள் அதாவது க்ன்ற்ஸ்ரீட் மக்கள் சரியாக அதே சமயம் நம் முகத்துக்கு நேராகப் பேசுவார்கள். சுற்றி வளைக்க மாட்டார்கள். எங்களைப் போன்ற வெளிநாட்டு அதிகாரிகள் இங்கு தொழில் முறையில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். இந்த நாடே கடல் மட்டத்தில் இருந்து கீழ் உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் அவர்கள் பல்வேறு முறைகளில் தங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு விவசாயம்தான் மிகவும் முக்கியமான ஒரு தொழில். தங்களுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக விளைவதால் விளை பொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். துலீப் மலர்கள் என்றால் இந்த நாட்டைதான் நாம் உடனேயே நினைவில் கொள்வோம். இந்தியநாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தி திரு உருவ சிலை ஏஹஞ்ன்ங் நகரத்தில் கம்பீரமாக உள்ளது.
சென்னைக்கு வந்து சில மாதங்கள்தாம் ஆகின்றன. இங்கு மொழி ஒரு பிரச்னை இல்லை. இங்கு பல மலேசிய மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். தமிழ் நாடு மட்டும் அல்லாமல் தென்னகம் முழுவதற்கும் உள்ள மலேசிய மக்களுக்கு வேலை செய்யவே இங்கு நான் வந்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று'' என்கிறார் புன்னகையுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...