தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பேல்பூரி

தண்ணீரிலும் நிலத்திலும் ஓடும் இந்த பைக்கின் பெயர் IBBS BISKI. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில்

News image
Updated On :5 நவம்பர் 2018, 10:13 am IST

கண்டது
• (திருப்பூர் பைபாஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவில்)
உலகை நேசி...
ஆனால் தனிமனிதனை 
நம்பாதே!
டி.கே.சுகுமார், கோவை. 

• (சென்னை கிண்டி அருகே ஒரு சித்த மருத்துவமனையின் பெயர்)
வேரும் தழையும்.
கோ.பெ.இளந்திரையன், சென்னை-116

• (சேலம் பேருந்து நிலையம் அருகே இருந்த வாடகைக் காரின் பின்புறம்)
குடும்ப கெளரவத்தைப் பார்...
குடும்பத்தில் கெளரவத்தைப் 
பார்க்காதே.
இரா.வசந்தராசன், கல்லாவி.

கேட்டது
• (சென்னை குருநானக் கல்லூரியின் வாசலில் இரு மாணவர்கள்)
"மச்சி... இண்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே.... பார்ட்டி எதுவும் கிடையாதா?''
"இண்டர்வியூவுக்குத்தானே போயிட்டு வந்திருக்கேன். அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் இன்னும் வாங்கலையே...''
"பரவாயில்லே... இண்டர்வியூவுக்குப் போனதுக்கு இப்ப பார்ட்டி வச்சிடு.... அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வரலேன்னா நான் பதிலுக்குப் பார்ட்டியை 
வச்சிடுறேன்''
பி.சரண், சென்னை-42.

• (கோவை - சூலூர் செல்லும் பேருந்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞரிடம் பெரியவர்)
"தம்பி வாயும் வயிறுமா இருக்குற பொண்ணு 
நிக்குது பாரு. எந்திரிச்சு கொஞ்சம் இடம் கொடேன்''
"நீங்க சொல்றது கரெக்ட் தாத்தா. ஆனா அந்த பொண்ணு கம்பியைக் கூட பிடிக்காம செல்போனை நோண்டிக்கிட்டே வர்றதைப் பாருங்க''
".....''
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

எஸ்எம்எஸ்
ஒரு செல்போன் விபத்து
இந்த தடவை செல்போன் பேட்டரி வெடிக்கவில்லை.
மனைவிக்கு பாஸ்வேர்டு தெரிந்துவிட்டது..
கே.கவின், பொள்ளாச்சி.

யோசிக்கிறாங்கப்பா!
உனது கண்கள் சரியாக இருந்தால்
இந்த உலகத்தை உனக்குப் பிடிக்கும்.
உனது நாக்கு சரியாக இருந்தால்
இந்த உலகத்துக்கு உன்னைப் பிடிக்கும்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு.

அப்படீங்களா!
தண்ணீரிலும் நிலத்திலும் ஓடும் இந்த பைக்கின் பெயர் IBBS BISKI. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது. சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ.வேகத்தில் இந்த பைக் ஓடும். தண்ணீரிலோ மணிக்கு 59.5 கி.மீ. வேகத்தில் செல்லும். 225 கிலோ எடையுள்ள இந்த பைக்கில் 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும் இந்த பைக் 5 நொடிகளில் தண்ணீரில் செல்வதற்குத் தயாராகிவிடும். இப்போதுதான் இந்த பைக்- படகைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன விலை என்று நிர்ணயிக்கப்படவில்லை. இதிலென்ன புதுசு? 
நம் நாட்டிலும் "தண்ணி'ல ஓடுற பைக் இருக்கிறது என்று சொல்லாதீர்கள்.
என்.ஜே., சென்னை-116.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.