தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பேல்பூரி

ஒவ்வோராண்டும் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகர்ப்பகுதியில் 2030 -இல் கடல் மட்டம் அரை அடியிலிருந்து 1 அடி வரை உயரக்கூடும் என்று

News image
Updated On :26 மே 2019, 9:27 am IST

கண்டது
* (வடலூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையின் பெயர்)
புஷ்பம்
வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

* (மதுரை மேலச்சித்திரை வீதியில் நின்று கொண்டுஇருந்த ஒரு லாரியில்)
தூங்கா நகரம் முதல் தலைநகரம் வரை
சூ.ப.தேசியமணி, மதுரை-1

* (வேளாங்கண்ணி கடைத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில்)
பசித்த வயிறு... பணமில்லா வாழ்க்கை...
பொய்யான உறவுகள்...
இம்மூன்றும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் 
பாடங்கள்.
எம்.ஆர்.முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.

கேட்டது
* (கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்)
"என்னடா பார்த்தே ரெண்டு வாரம் ஆகுது... ஒரு போன் கூட பண்ணமாட்டேங்கிற?''
"எங்கடா நேரமே இருக்குறதில்லை... அவுட் கோயிங் பேலன்ஸ் கட் ஆகி ரெண்டு மூணு நாள் ஆகுது... சாயங்காலம்தான் ரீ சார்ஜ் பண்ணணும்''
"டே... போன மாதம்தானே நாம ரெண்டு பேரும் த்ரீ மன்த் பேக் போட்டோம்? எதுக்குடா பொய் சொல்றே?''
க.சங்கர், நாகர்பாளையம்.

* (பாளையங்கோட்டை மார்க்கெட் சாலையில்)
"வண்டியை கொஞ்சம் ஓரமா விடக் கூடாதா? பாதையில்லைன்னா அடுத்த ஆளு எப்படி வண்டியை ஓட்டிட்டுப் போறது?''
"இந்தப் பாதையிலே அட்ஜஸ்ட் பண்ணி ஓட்ட முடியாதுன்னா எதுக்கு வண்டி வச்சிருக்கீங்க?''
"சரி தம்பி... வித்துடுறேன்''
இலக்கியா, திருநெல்வேலி -2

யோசிக்கிறாங்கப்பா!
பத்தாயிரம் ரூபாய் போனில் செல்ஃபி எடுக்கும்
பசங்களுக்குத் தெரியாது...
ஸ்கூலில் எடுத்த குரூப் போட்டோவை வாங்க 
பத்து ரூபாய் கிடைக்காமல்
கண்கலங்கி நின்ற அப்பாக்களைப் பற்றி.
அ.செல்வகுமார், சென்னை-19.

எஸ்எம்எஸ்
என்னதான் வேகமா ஓடினாலும் 
ஃபேன் வீட்டைவிட்டு 
வெளியே போகாது.
பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

அப்படீங்களா!
ஒவ்வோராண்டும் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகர்ப்பகுதியில் 2030 -இல் கடல் மட்டம் அரை அடியிலிருந்து 1 அடி வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தெற்கு ஃபுளோரிடா பகுதி கடல்நீர் மட்டம் உயர்வதால் அதிகம் பாதிப்படையக் கூடும் என்றும் கடற்கரையருகே உள்ள நிறைய கட்டடங்கள் கடலில் மூழ்கிவிடக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கடல்நீர் மட்டம் எவ்வளவு உயர்ந்தாலும் நீரில் மூழ்காத வீடுகளை உருவாக்கியுள்ளது அமெரிக்காவில் உள்ள ARKUP நிறுவனம்.
பார்ப்பதற்குப் படகைப் போன்றிருக்கும் இந்த வீடு 2 மாடிகளைக் கொண்டது. சமையலறை, டைனிங் ஹால், 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள் என அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் வீடுகள் கடலுக்குள் கடல் மட்டத்தில் இருந்து 40 அடி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிறுத்தி வைக்கப்படுவதற்கு ஹைடிராலிக் முட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீர் மட்டத்திலிருந்து வீட்டைத் தூக்கிநிறுத்த உதவும்வகையில் 272 HP மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. புயல் அடித்தாலும் இந்த முட்டுகளை அசைக்க முடியாது. எனவே மிதக்கும் வீடு "அப்படி... இப்படி' நகராது. 
"கடலுக்குள் வீடு இருந்தால் கரண்டுக்கு எங்கே போவது?' என்று கவலைப்படத் தேவையில்லை. வீட்டின் மேற்புரத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறுவதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 2100 -க்குள் மியாமி நகரே கடலுக்குள் மூழ்கிவிடக் கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அப்பகுதி மக்கள் இந்த மிதக்கும் வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டின் விலை? ரொம்பவும் அதிகமில்லை....38 கோடியே 34 லட்சத்து, 13 ஆயிரத்து 250 ரூபாய்கள்தாம். அதாவது, 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 
என்.ஜே., சென்னை-58.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.