திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இரவில் வீட்டில் படுத்ததே இல்லை

ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமலிருந்த உப்பு சத்தியாகிரக போராட்ட வீரர் சர்தார் வேத ரத்தினத்தைப் பார்த்த அவரின் குடும்ப டாக்டர், "ஆறு மாத காலத்திற்கு நீ உன் வீட்டுப் படியை விட்டு வெளியே இறங்கக் கூடாது.

News image
Updated On :18 ஏப்ரல் 2021, 12:30 am


ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமலிருந்த உப்பு சத்தியாகிரக போராட்ட வீரர் சர்தார் வேத ரத்தினத்தைப் பார்த்த அவரின் குடும்ப டாக்டர், "ஆறு மாத காலத்திற்கு நீ உன் வீட்டுப் படியை விட்டு வெளியே இறங்கக் கூடாது. இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு இருப்பதாக ஒப்புக்கொண்டால் தான் நான் உனக்கு வைத்தியம் செய்வேன்' என்றார். 

சர்தார் வேதரத்தினத்துக்கும் அந்த நிபந்தனைக்கு உட்படுவது தான் அப்போது செய்யக்கூடிய காரியமாக இருந்தது. ""ஆகட்டும் டாக்டர்'' என்று ஒப்புக் கொண்டார்.

சிகிச்சை தொடங்கிற்று. அந்த டாக்டரின் திறமையான சிகிச்சையால் வேதரத்தினம் வெகு விரைவில் நல்ல உடல் நலத்தை மீண்டும் அடைந்தார்.

வேத ரத்தினம் தம் வாழ்நாளிலேயே அந்த ஒரே ஒரு தடவை தான் சேர்ந்தாற் போல 6 மாத காலம் தம் சொந்த வீட்டில் படுத்திருந்தார்.

பிற்காலத்தில் அவருடைய வாழ்வின் பெரும் பகுதி நாள்கள் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்வதிலேயே கழிந்தது. வேதாரண்யத்தில் தங்க நேர்ந்த ஒரு சில நாள்களிலும் இரவில் அவர் தம் வீட்டில் படுத்ததே இல்லை. உப்பு கடையிலேயே படுத்து உறங்கினார்.

(கங்கை பகீரதன் எழுதிய "மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.