தயாரிப்பாளரின் சூழலைப் புரிந்துகொண்டு சம்பளம் நிர்ணயிப்பதில் கறாராக இல்லை என்பதுதான் பிரியா பவானி சங்கருக்கு கிடைத்திருக்கும் நல்ல பெயர். அதே சமயம், நல்ல தரமான படங்களை மட்டுமே ஏற்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சிம்ரன் இவர்தான் என பிரியாவை புகழ்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
--------------------------------------------------------------------------
விக்னேஷ் சிவனிடம் உதவியாளராக இருந்த வினாயக் என்பவர் "வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார். இப்படம் முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்தி, காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இதை நயன்தாரா தயாரிக்கவுள்ளார்.
--------------------------------------------------------------------------
ஓ மை கடவுளே' படத்தின் மூலம் பிரபலமான வாணி போஜன், மீண்டும் அசோக்செல்வனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மோகன் ராஜாவிடம் உதவியாளராக இருந்த வெங்கட் என்பவர் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
--------------------------------------------------------------------------

உப்பெனா' தெலுங்கு படத்தில் நாயகி கிருதி ஷெட்டியின் தந்தை வேடத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. "உப்பெனா' ஹிட் காரணமாக விரைவில் தமிழில் இரண்டு மெகா படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் கிருதி ஷெட்டி.
--------------------------------------------------------------------------
மிழில் கார்த்தியுடன் "சகுனி' படத்தில் நடித்தவர் பிரணிதா. தற்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கும் "சபாஷ்' என்கிற படத்தில் நடிக்கும் பிரணிதா, தனது உடல் எடையைக் கூட்டும் முயற்சியை எடுக்க துணிந்துவிட்டார்.
--------------------------------------------------------------------------
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது மைதானத்தில் இருந்த அஸ்வின், விஜய்யின் "மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற "வாத்தி கமிங்...' பாடலுக்கு விஜய் போலவே நடனம் ஆடியிருக்கிறார். இந்த விடியோ தற்போது இணையத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.
--------------------------------------------------------------------------
கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் "சுல்தான்' படத்தை "ரெமோ' படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். ""சுல்தான் கிட்டத்தட்ட மகாபாரதக் கதைதான். ஒரு சின்ன வித்தியாசம் மகாபாரதத்திலே கிருஷ்ணர் கவுரவர்கள் பக்கம் நின்றால் எப்படி இருக்கும், அந்த புள்ளியிலிருந்துதான் இந்த படம் தொடங்குகிறது'' என்கிறார், பாக்கியராஜ் கண்ணன்.
--------------------------------------------------------------------------
அப்பா- மகள் பாசத்தில் க்ரைம் த்ரில்லர் கலந்த படமாக உருவாகி மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் "ஹெலன்'. இதில் அப்பாவாக லாலும், மகளாக அன்னா பென்னும் நடித்தார்கள். தமிழில் "அன்பிற்கினியவள்' என்ற பெயரில் ரீமேக்காகும் இப்படத்தில் அருண் பாண்டியனும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடித்துள்ளார்கள்.
--------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கார்த்திகா. "தூத்துக்குடி' என்ற படத்தில் "கருவாப்பையா...' என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம்தான் ஞாபகத்துக்கு வரும். இவர் தமிழில் மீண்டும் ரீ-எண்ட்ரியாகிறார்.
--------------------------------------------------------------------------
விஜய்யின் 65- ஆவது படத்தை "கோலமாவு கோகிலா' மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இதில் வில்லனாக "பேட்ட' புகழ் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க இருக்கிறார்.
--------------------------------------------------------------------------

50 வயதை கடந்துவிட்ட நதியா இந்த வயதிலும் இளமையைத் தக்க வைத்திருக்
கிறார். வெள்ளை நிற உடையில் தலையில் தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் என கூலாக அமர்ந்திருக்கும் அவரின் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத் பொறுப்பாளா்களுக்கு தங்கச் சங்கிலி: நயினாா் நாகேந்திரன்
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு