தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிரி... சிரி... 

""எங்க பொண்ண கஷ்டம்னா என்னன்னு தெரியாமலே வளர்த்துட்டோம் சம்பந்திஅம்மா!''""கவலையை விடுங்க... எது தெரியலைன்னாலும் நான் கத்துக் கொடுத்துடறேன் !''

News image
Updated On :11 ஜூலை 2021, 12:30 am

DIN

""எங்க பொண்ண கஷ்டம்னா என்னன்னு தெரியாமலே வளர்த்துட்டோம் சம்பந்திஅம்மா!''
""கவலையை விடுங்க... எது தெரியலைன்னாலும் நான் கத்துக் கொடுத்துடறேன் !''

""யாரோட பேச்சையும் எங்க தாத்தா கேட்கவே மாட்டாரு!''
""ரொம்ப கர்வம் பிடிச்சவரா?''
""இல்ல, ரெண்டு காதுமே கேட்காது!''

""டாக்டர் மயக்கம் போட்டு விழற அளவுக்கு அந்த நடிகை அப்படி என்ன தான் சொன்னாங்க?''
""வயசு கேட்டப்ப,19-ன்னு சொன்னாங்களாம்!''

-வி. ரேவதி, தஞ்சை.

""எல்லா மீட்டீங்லேயும் கடைசி சீட்டுலேயே உட்காருறாரே!''
""தலைமைகிட்டேயிருந்து ஒதுங்கியிருக்கிறாராம்''

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.

""தங்கள் வாளுக்கு பெயிண்ட் அடிக்கவா மன்னா''
""அழகு பொருள் வரிசையில் என் வாளும் இடம் பெறவா அமைச்சரே ?''

ஆர். சீதாராமன்,
சீர்காழி.

""ஆபீசில் திருடு போன பணத்தை அந்த வழுக்கைத் தலை கிளார்க் தான் எடுத்தார்னு எப்படி கண்டு பிடிச்சாங்க?''
""தலைக்கு காஸ்ட்லி விக் வாங்கி மாட்டியிருந்தாராம்''

அப்ரோஸ் பானு,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.