திரைக்கதிர்

மலையாளத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த படம் "ஹிருதயம்'.
திரைக்கதிர்


மலையாளத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த படம் "ஹிருதயம்'. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் வாங்கி உள்ளார். 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனது சுட்டுரையில்... " தொழில்துறையில் இந்த இரண்டு மதிப்புமிக்க மற்றும் மரியாதைக்குரிய பெயர்களுடன் இணைந்திருப்பதன் மூலம் எங்கள் அணியின் கனவு நனவாகும்.

எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்த மாதவன் சார், கரன்ஜோஹர் சார் ஆகியோருக்கு நன்றி. எங்கள் படத்தின் மீது நீங்கள் பொழிந்திருக்கும் அளப்பரிய அன்பிற்காக உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் சார்பில்  மனமார்ந்த நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------

இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு துபை அரசு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடிமகனாகக் கருதப்படுவார்கள். இதனால் எந்த விசாவும் இல்லாமல் எளிதாக எப்போது வேண்டுமானாலும் துபைக்குச் சென்று வரலாம். இந்த கோல்டன் விசாவைப் பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது. தமிழில் இதுவரை பார்த்திபன், த்ரிஷா, மீனா உள்ளிட்ட பலர் இந்த விசாவைப் பெற்றிருக்கிறார்கள். தற்போது ஆண்ட்ரியாவுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடிகை, இசை அமைப்பாளர், பாடகி, நடன கலைஞர் என பன்முகம் கொண்டவர் என்பதாலும் துபைக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பதாலும் இந்த விசா அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------

ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழி மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்த அம்மு அபிராமி,  "பேட்டரி' படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். ஏற்கெனவே "அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தாலும் அதில் பிளாஷ் பேக் காட்சியில் மட்டுமே வருவார். இதில் நாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்து அடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். 

மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவசச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார்.

தன் ஒரே மகளைக் கொலை செய்த கொலைகாரனைத் தேடி அலையும் துணை கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் இணைத்து சொல்லப்படுகிறது படத்தின் கதை.

-----------------------------------------------

நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணிக்கு கமல்ஹாசன் நேரடியாகவே ஆதரவு தெரிவித்தார்.  இப்போது பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் கமல்ஹாசன் நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க விதிமுறைகளின்படி, அறக்கட்டளையின் தலைவராக நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் இருப்பார்.  அவருடன்  கமல்ஹாசன், பூச்சி முருகன், ராஜேஷ், லதா, கோவை சரளா, சச்சு ஆகியோரும் நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

-----------------------------------------------

தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. "டார்லிங்' படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர்  "யாகாவாராயினும் நாகாக்க', "மொட்ட சிவா கெட்ட சிவா', "ஹர ஹர மகாதேவி',  "மரகத நாணயம்' உள்ளிட்ட 
பல படங்களில் நடித்தார். 

"மரகத நாணயம்' படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக விமானப் பயணங்கள் மேற்கொண்டனர். ஆதி வீட்டில் நடந்த விழாக்களில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். இதனால் இருவரின் காதலும் உறுதியானது. தற்போது  நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த கட்டமாக திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com